பாரதியிடம் எனக்கு தான் அம்மா இல்லையே யாரை டிவோஸ் செய்யப் போறீங்க எனக் கேட்கும் ஹேமா.! அதிர்ச்சியில் கண்ணம்மா..

bharathi-kannama-hema
bharathi-kannama-hema

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்கள் பலவற்றையும் ஒளிபரப்பி வருகின்றார்கள்.

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் தொடர்ந்தும் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய வெளிவந்த ப்ரோமோவில் ஹாஸ்பிட்டலில் பாரதியை பார்ப்பதற்காக வந்த ஹேமா யாருக்கு டிவோர்ஸ் கொடுக்க போறீங்க.? அம்மா இறந்துடாங்கனு தான சொன்னிங்க. அம்மா எங்க இருக்காங்க நீங்க ஏன் பிரிஞ்சி இங்க.? என கேட்கிறார்.

ஹேமா இப்படி பாரதியிடம் ஹேமா கேட்க இன்னொருபுறம் வெண்பா மற்றும் ரோஹித் இருவரும் பீச்சிக்கு சென்று உள்ளார்கள். அங்கு ரோகித் வெண்பாவின் துப்பட்டாவை வைத்து மீன் பிடிக்குமாறு வெண்பவை அழைத்து விளையாடுகிறான். மேலும் வெண்பா ரோஹித்திடம் எனக்கு பாரதியை தான் மிகவும் பிடித்திருக்கிறது.

பாரதிக்கு டிவோர்ஸ்சாக கொஞ்சம் நாள் ஆகும் ஆனால் அம்மா தான் மிகவும் அவசர படுத்துறாங்க என கூற ரோகித் மிகவும் கோபமடைகிறான். பிறகு பாரதி கண்ணம்மாவை பார்த்து ஹேமாவிடம் இதனைப் பற்றி ஏன் கூறினாய் என்று சண்டை போட நான் கூறவில்லை. லக்ஷ்மி சௌந்தர்யா இருவர் மீதும் சத்தியம் செய்கிறார் கண்ணம்மா. பிறகு இதனை பற்றி ஹேமாவிடம் யார் சொல்லி இருப்பாங்க என்று பாரதி யோசிக்கிறான் இதுதான் தற்போது வந்த ப்ரோமோவில் நடக்கிறது.