விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக வெண்பாவின் திருமணத்தை மையமாக வைத்தும், பாரதி மற்றும் கண்ணம்மா எப்படி ஒன்று சேர்ந்த போகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில்தான் வெண்பாவும் சாரதியும் திருமணம் செய்து கொள்ளப் போவதை பாரதி அறிந்தார். பிறகு அனைவருக்கும் தனது மாப்பிள்ளையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஷர்மிளா தனது நெருங்கிய வட்டாரங்களுடன் சங்சன் ஒன்றை நடத்திவுள்ளார்.
அந்த பங்குஷனில் கண்டிப்பாக சௌந்தர்யா கலந்து கொள்ள வேண்டுமென ஷர்மிளா கூறுகிறார் மேலும் சௌந்தர்யா கண்டிப்பாக தனது குடும்பத்துடன் தருவதாக கூறுகிறார். இதனைத் தொடர்ந்து சாரதி பாரதியை மருத்துவமனையில் சந்தித்து கண்டிப்பாக பங்குஷானுக்கு வந்துவிடவேண்டும் என்று கூறிவிட்டு கண்ணம்மா விடமும் அழைப்பு விடுத்துள்ளார்.
சௌந்தர்யா லக்ஷ்மியை தனது வீட்டிற்கு அழைக்க கண்ணம்மாவும் லட்சுமிவுடன் செல்கிறார் அங்கு குடும்பமாக அனைவரும் அந்த பங்குஷனுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் ஃபங்ஷன் தொடங்கியது அவ்வப்பொழுது ஷர்மிளா என்னுடைய பேபி வெண்பாவை மேடைக்கு அழைக்கிறேன் என்று கூறிவிட்டு இன்னொருவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது என்னுடைய மாப்பிள்ளை என்று சாரதியை கூறுகிறார்.
சாரதி தேங்க் யூ அத்தை என்று கூற வெண்பா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை பாரதியை தான் நான் காதலிக்கிறேன் என்று அனைவர் முன்பும் மேடையில் கூறுகிறார். பிறகு பாரதி மைக்கை வாங்கி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு துளி கூட இல்லை என்று கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.