விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் இந்த சீரியல் எப்போது முடியும் என்று கேட்டு வருகிறார்கள்.
கண்ணம்மாவின் மீது எந்த தப்பும் இல்லை என்றாலும் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளாமல், கண்ணம்மாவை பத்து வருடங்களாக சந்தேகப்படுவது வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் லக்ஷ்மி மற்றும் ஹெமா இருவருக்கும் இவர்கள்தான் தங்களுடைய அம்மா அப்பா என்பதை அறிந்து கொண்டார்கள்.
எனவே கண்ணம்மா மற்றும் பாரதி எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில் ஹேமா அழுது என்னுடைய அம்மா யார்.? யார் டிவோர்ஸ் செய்ய போறீங்க.? தொடர்ந்து கேட்டு வந்தார்.
இதனால் ஹெமா சரியாக சாப்பிடாததால் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஹேமா எங்க அம்மாவை டிவோர்ஸ் செய்ய மாட்டீங்கன்னு சத்தியம் செய்யுங்கள் என்று கூற பாரதியும் யாரையும் நான் விவாகரத்து செய்யவில்லை என்று கூறி சத்தியம் செய்கிறார்.
பிறகு உங்க அம்மாவை பற்றி மத்தவங்க கூறி இருக்கிற எல்லாமே பொய், உங்க அம்மா நீ சின்ன வயசுல இருக்கும்போது செத்துட்டாங்க, என்று கூறுகிறார். பிறகு லட்சுமி பாரதியிடம் இன்னைக்கு என்ன கண்டுக்கவே இல்ல ஹேமாவைப் பிடிக்கும் அளவிற்கு என்ன உங்களுக்கு பிடிக்காதா என்று கேட்கிறார் அதற்கு பாரதி ஹேமாவை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு உன்னையும் பிடிக்கும் என்று கூறுகிறார்.