விஜய் டிவியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் இடம்பெற்று வரும் அனைத்து எபிசோடுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் ஒரே கதையை மையமாக வைத்து தற்போது வரை ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
இதன் காரணமாக ரசிகர்களுக்கு இந்த சீரியலை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல திருப்பங்களை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் வெண்பாவிற்கு சாரதி என்பவருடன் திருமணமாக இருக்கிறது. வெண்பா அனைவர் முன்பும் பாரதியை காதலிப்பதாக கூறினாலும் வெண்பாவின் மீது எனக்கு எந்த ஒரு தவறான எண்ணமும் இல்லை என்று கூறிவிட்டான்.
இப்படிப்பட்ட நிலையில் பாரதி டிவோர்ஸ் செய்யப் போவதை அறிந்து கொண்ட ஹேமா நீங்கள் யாரையும் டிவோஸ் செய்யக்கூடாது என்று அழுததால் பாரதியும் அதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் இதனை கொண்டாடும் வகையில் கண்ணம்மா மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் ஸ்பீட் வழங்கினார் இதனால் கோபமடைந்த பாரதி மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வந்த பிரம்மாவின் ஹேமா மயங்கி விழுந்து விடுகிறார் உடனே கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்பொழுது ஹேமாவை கடைசியாக எப்ப சாப்பிட்ட என்று பாரதி கேட்க ஹேமா நான் சாப்பிடவில்லை என்று கூறுகிறார்.
உடனே பாரதி சௌந்தர்யாவிடம் இதுதான் எனது மகளை நீங்கள் பார்த்துக் கொள்ற லட்சனமா என்று கூற ஹேமா இங்க யார டிவோர்ஸ் செய்ய போறீங்க கேட்க பாரதி எல்லாம் யாரும் இல்லை நான் பொய் சொன்னேன் என்று கூறுகிறார். ஹேமா ப்ராமிஸ் கேட்கிறார் பிறகு எப்படியோ ஹேமாவை பாரதி சமாளித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ரூமில் இருந்து வெளியே வந்து இதெல்லாம் முன்னால் தான் உன்னால்தான் என்னுடைய மகளுக்கு இப்படி உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது முதலில் இந்த வீட்டை விட்டு போ என்று கண்ணம்மாவை திட்டுகிறார் பாரதி.