கணவன், மனைவியாக வெண்பாவின் எங்கேஜ்மென்ட் நிகழ்ச்சிக்கு சொல்லும் பாரதி மற்றும் கண்ணம்மா.!

kannama-bharathi
kannama-bharathi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்படி இணைகிறார்கள் என்பதை வைத்துதான் சமீபகால எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியான வெண்பாவிற்கு சாரதி என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா.

அந்த வகையில் வெண்பா மற்றும் சாரதி இருவருக்கும் இனிவரும் எபிசோடுகள் எங்கேஜ்மென்ட்டாக இருக்கிறது. இதற்காக ஷர்மிளா சௌந்தர்யாவை அழைத்துள்ளார்.  மேலும் சாரதியும் பாரதி மற்றும் கண்ணம்மாவை நேரில் சந்தித்து கண்டிப்பாக எங்கேஜிமெண்ட் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

இவர் குடும்பத்துடன் சாரதி மற்றும் வெண்பாவின் எங்கேஜிமெண்ட் நிகழ்ச்சிக்கு போக இருக்கிறார்கள்.  அதாவது சௌந்தர்யா லட்சுமியை நாம் காரில் போகலாம் என்று கூற லக்ஷ்மியும் சௌந்தர்யா வீட்டிற்கு வந்துவிடுகிறார்.  லக்ஷ்மிவுடன் கண்ணம்மா வர பாரதி கண்ணம்மா தனது இரு மகள்கள் என குடும்பமாக எங்கேஜிமெண்ட் நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள்.

கண்ணமாவுடன் லட்சுமி வந்ததால் பாரதியால் கண்ணம்மாவை எதுவும் சொல்ல முடியவில்லை வேறு வழி இல்லாமல் எங்கேஜ்மென்ட் நிகழ்ச்சிக்கு  அழைத்துக் கொண்டு செல்கிறார்.