விஜய் டிவியின் மிகவும் விறுவிறுப்பாகவும் பல சுவாரசியமாகவும் சமீப காலங்களாக ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளதால் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எப்படி சேர்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து சமீப காலங்களாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா செய்த சதித்திட்டங்கள் அனைத்தும் தற்போது அவருக்கு எதிராகவே இருந்து வருகிறது.
வெண்பாவின் அம்மா ஷர்மிளா சாரதி என்ற பையனை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். மேலும் சாரதி வெண்பா எந்த தப்பு செய்திருந்தாலும் பரவாயில்லை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
மாயாண்டி வெண்பாவிற்கு போன் செய்து நீ கண்ணம்மாவிற்கு எதிராக போட்ட அனைத்து சதித் திட்டங்களையும் நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன் அதனை சாரதி மற்றும் பாரதியிடம் காட்டக்கூடாது என்றால் 25 லட்சம் பணம் தருமாறு கேட்டு மிரட்டுகிறான்.
இதனை தெரிந்துகொண்ட சாரதி மாயாண்டியை அடித்து வெண்பாவின் முன்வந்து மன்னிப்பு கேட்க வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஷர்மிளா பெண்பா மற்றும் சாரதி இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதால் அதற்கு முன்பு சின்ன பங்ஷன் ஒன்றை நடத்த முடிவு எடுத்துள்ளார்.
அந்த வகையில் ஷர்மிளா சௌந்தர்யாவுக்கு கால் செய்து ஃபங்ஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். சௌந்தர்யாவும் கண்டிப்பாக நான் வருகிறேன் என்று கூறிய நிலையில் சாரதி பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறான். மேலும் பாரதி சாப்பிட வில்லை என்பதற்காக கண்ணம்மா பாரதிக்கு சாப்பாடு பரிமாற கணவன் மனைவி போல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாரதியை சந்தித்த சாரதி எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது அதற்கு முன்பு சின்ன ஒரு ஃபங்ஷன் வைத்துள்ளோம் கண்டிப்பாக அதற்கு நீங்கள் வரவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பாரதி கண்டிப்பாக நான் வருகிறேன் என்று கூறிய நிலையில் பிறகு கண்ணம்மாவிடம் சாரதி இங்கு பாரதியின் மனைவி கண்ணம்மா எங்கே என்று கேட்கிறார்.
நான்தான் அந்த கண்ணம்மா கூற சாரதி நீங்க தானா என்று கேட்கிறார் பிறகு கண்ணம்மா உன்னை பார்க்கும் பொழுது எனக்கு என் தம்பி போல் உணர முடிகிறது எனக்கூற சாரதியும் அக்கா என இருவரும் பாச மழையை பொழிகிறார்கள்.