விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் பிரபலமடைந்து ரசிகர்கலின் ஃபேவரட் சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாரதி கண்ணம்மா.
கடந்த பத்து வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவிற்கு காரணமாக இருந்தவரும் வெண்பாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. வெண்பாவின் அம்மாவாக நடித்து கொடுத்திருக்கும் ஷர்மிளா எப்படியாவது வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என ஒரு முடிவில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த வேலைக்காரன் சீரியலில் நடித்து இருந்த ஹீரோவை ரோஷித் என்ற கதாபாத்திரத்தில் வெண்பாவிற்கு ஜோடியாக களமிறக்கி உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாரதியின் மருத்துவமனைக்கு ரோகித் மற்றும் வெண்பா இருவரும் சென்றிருந்த பொழுது பாரதி ரோஹித் மற்றும் வெண்பாவிற்கு திருமணமாகப் போவதை தெரிந்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பே ஷர்மிளா ஏதோ இவர்களுக்கான நிகழ்ச்சியொன்றை சொந்தக்காரர்கள் முன்னிலையில் நடத்த இருக்கிறார். இதனைப்பற்றி சௌந்தர்யாவிடம் எங்கள் வீட்டில் பங்க்ஷன் இருக்கிறது வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
ஏற்கனவே நான் வெண்பாவின் திருமணத்தினை முன்னிருந்து நடத்தி வைப்பேன் என்று வாக்களித்துள்ளான் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பேனா என்று கூறுகிறார். மறுபுறம் வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது அதனை அனைவருக்கும் காட்டி விடுவேன் என்று கூறி மாயாண்டி வெண்பாவிற்கு கால் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினான்.
இதனைப் பற்றி தெரிந்து கொண்ட ரோஹித் அவனை அடித்து வெண்பா முன்பு அழைத்து வந்து இவன் தானா உன்னை மிரட்டினது என்ற கூற உடனே மாயாண்டி மேடம் உங்கள் பற்றி எந்த வீடியோவும் என்னிடம் இல்லை என் போன் கூட சார்டதான் தான் இருக்கு என்று கூறுகிறான். இதுதானே இந்த எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.