விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.
கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வரும் பாரதி மற்றும் கண்ணாமா எப்படி இணையப் போகிறார்கள் என்றும் இவர்களின் பிரிவிற்கு காரணமாக இருக்கு வெண்பாவுக்கு எப்படி திருமணம் நடக்க இருக்கிறது என்பதை மையமாக வைத்தும் சமீப காலங்களாக எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தொடர்ந்து சில முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடிப்பதற்காக அறிமுகமாகிய உள்ளார்கள். வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா கதாபாத்தின் மூலம்தான் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷர்மிளா எப்படியாவது தனது மகள் வெண்பாவிற்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக ரோகித் என்ற கேரக்டரை களமிறக்கி உள்ளார்கள். வெண்பா நான் பாரதியை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் பலவற்றை சொன்னாலும் உனக்கு திருமணமாகி இருந்தால் கூட பரவாயில்லை நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார் ரோஹித்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரோஹித் மற்றும் வெண்பா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒருவர் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கிறார். உடனே ரோகித் காரிலிருந்து கீழே இறங்கிய அந்த நபரை தூக்கி கொண்டு எனது காரில் வைத்து மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு தான் சென்றுள்ளனர். இவ்வாறு இவர்களைப் பார்த்த கண்ணம்மா உடனே பாரதியை அழைத்து வந்து வெண்பாவை காமித்தும் பக்கத்தில் இருக்கும் ரோஷித்தை காண்பித்தும் இவர்தான் வெண்பாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று நக்கலாக கூறுகிறார்.
பிறகு ரோஹித்தும் ஆமாம் என்று கூறிவிட்டு பாரதிக்கு கை கொடுத்து விட்டு வெண்பாவை தனது ஒரு கையால் கட்டியணைக்கிறார். பாரதி ஆச்சரியத்துடன் பார்க்க வெண்பா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.