தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.
இன்றைய எபிசோடில் மருத்துவமனையில் கண்ணம்மா பாரதியை பார்த்த ஜானகி மேடம் கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டுமா என்ன கேட்கிறார். அதற்கு பாரதி அதே மாதிரி ஒரு கேஜை சந்தித்த நான் ஆப்ரேஷன் செய்துள்ளேன் தற்பொழுது காரை நலமுடன் இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்.
பிறகு லக்ஷ்மி ஹேமாவிடம் அம்மாவை பற்றி டாக்டர் அப்பாவிடம் கேட்டியா எனக் கேட்கவில்லை என சொல்ல அப்பாவை சந்தித்து பேசிய வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார் லக்ஷ்மி அதற்கு ஹேமாவும் அப்படியே செய்யலாம் என்று கூறுகிறார்.
அதன் பிறகு ஹாஸ்பிடலில் இருந்த ஜானகி மற்றும் அவருடைய கணவர் ராமன் சார் இருவரையும் காணவில்லை என நர்ஸ் வந்து கண்ணம்மாவிடம் சொல்ல இதனைக் கேட்ட இன்னொரு நர்ஸ் பாரதியிடம் இதனைப் பற்றி சொல்ல கண்ணம்மா நான் தான் வெளியில் வாக்கிங் போக சொன்னேன் என்று கூறுகிறார்.
உடனே பாரதி கண்ணம்மாவிடம் வாக்கிங் போக வெளியே அனுமதித்தது தவறு என சத்தம் போடுகிறார். போய் அவர்களை தேடி கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார். இன்னொரு புறம் அந்தக் கார் திருட்டு கார் இல்லை ரோஹித்தின் கார் தான் என வெண்பாவிடம் சண்டை போட்டவரிடம் பணம் கொடுத்து ரோஹித் பேச சொல்கிறார். எப்படியோ வெண்பாவிற்கு சந்தேகம் வருவதற்குள் ரோகித் தப்பித்து விடுகிறார்.