ரோகித் திருடன் என்பதை அறிந்து கொண்ட வெண்பா.! பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்..

bharathi-kannama-22
bharathi-kannama-22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரம் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி எப்படி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளப் போகிறார் என்பதை மையமாக வைத்தும், ரோகித் மற்றும் வெண்பா  இருவர்களின் திருமணம் எப்படி நடைபெற இருக்கிறது என்பதை மையமாக வைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வெண்பா கண்ணம்மாவை லாரியில் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். லாரி கண்ணம்மாவை இடிக்க வரும் நேரத்தில்  சௌந்தர்யா மற்றும் ஹேமா இருவரும் பார்த்துவிட்டு கண்ணம்மா என்று கத்துகிறார்கள். ஆனால் கண்ணம்மா காதில் வாங்காமல் போன் பேசிக் கொண்டே வருகிறார்.

மேலும் சௌந்தர்யா கண்ணம்மா என்ற கூப்பிட்டதை பார்த்த ஹேமா ஏன் சமையலமாவை கண்ணம்மா என்று கூப்பிடுறாங்க என்று குழப்பத்தில் இருந்து. இதனைத் தொடர்ந்து ரோஹித் எப்படியாவது வெண்பாவின் மனதை மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறான்.

அதோடு மட்டுமல்லாமல் ஷர்மிளா ரோகித்திடம் எப்படியாவது வெண்பாவின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ரோகித்தின் காரை எடுத்துக்கொண்ட வெண்பா வெளியில் போகிறார்.

அந்தக் கார் பாதியிலேயே நின்றதால் உதைத்துக்கொண்டு இருக்கிறார் இதனை பார்த்த ஒருவர் தலைவரின் காரை இப்படி உதைக்கிறார் என்று நினைத்துக் கொண்டு எங்கிருந்து இந்த காரை திருடின என்று கேட்கிறார். இதன் பிறகு தான் தெரிகிறது ரோகித் வேறு ஒருவரின் காரை திருடிக் கொண்டு தனது காரணக் கூறுகிறார்.