விஜய் டிவியின் தொடர்ந்த ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சம்பந்தமே இல்லாத பல காட்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களிடம் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது ஆனால் இடையில் சில காலங்களாக டிஆர்பி-யில் பெரிது அடிவாங்கியது எனவே மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல கேரக்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தி வந்தார்கள்.
அந்த வகையில் சௌந்தர்யாவின் நண்பர் விக்ரமின் மருத்துவமனையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள். ராமன், ஜானகி என வயதான ஜோடிகளை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஜானகி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக பாரதி மற்றும் கண்ணம்மா பணியாற்றி வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவப்பொழுது பாரதி மற்றும் கண்ணம்மா இவர்களுடைய குழந்தைகள், சௌந்தர்யா உள்ளிட்ட அனைவரிடமும் அன்பாக பழகினார். இப்படிப்பட்ட நிலை ஜானகி பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் எனக்காக ஒரே ஒரு நாள் மட்டும் நீங்கள் குழந்தைகளுடன் வெளியில் சென்று வர வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டார்.
பிறகு சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஜானகி இறந்த நிலையில் உடனே அவருடைய கணவரும் இறந்தார். மருத்துவமனையில் உள்ள அனைவரும் வருத்தப்பட்ட நிலையில் இவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பாரதி கண்ணம்மா மற்றும் ஹேமா,லட்சுமி என அனைவரும் வெளியூர் செல்கிறார்கள்.அங்கு காரில் பாரதியின் மேல் கண்ணம்மா தூங்கி தொங்கி விழுகிறார். மேலும் வளையல் கடையில் வளையல் வாங்கி கண்ணம்மாவிற்கு போட்டு விடுகிறார்.
கண்ணம்மாவை பார்த்து இன்னைக்கு கண்ணில் மை போடவில்லை என்று பாரதி கேட்க ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று கண்ணம்மா கூற உன் கண்ணுக்கு மை வச்ச அழகாக இருக்கும் என்று கூற பிறகு கண்ணம்மா மை வாங்கி தனது கண்ணில் வைத்துக் கொள்கிறார். இவ்வாறு பார்க்கும் பொழுது பாரதி மனம் மாறியது போல் தெரிய வருகிறது.