விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாத பல கேரக்டர்களை அறிமுகப்படுத்தி எபிசோடுகளை ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது கண்ணம்மா என்னுடைய அம்மா தானா என்ற குழப்பத்தில் ஹேமா இருந்து வருகிறார். எனவே கண்ணம்மா ஹேமா தன்னுடைய மகள்தான் என்ற சொல்ல முடியாமல் சௌந்தர்யாவுக்கு போன் செய்த அழுது சோகத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வயதான ஜோடிகளாக ஜானகி, ராமன் என்பவர்களை அறிமுகப்படுத்தினார்கள். மேலும் இவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்வது போலவும் அவர்களை பாரதி மற்றும் கண்ணமா இருவரும் நல்லபடியாக பார்த்துக் கொள்வது போலவும் காட்சி வெளி வந்தது.
மேலும் ஜானகி பாரதி,கண்ணம்மா இருவரையும் ஒரே ஒரு நாள் மட்டும் எனக்காக தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று விட்டு வருமாறு சத்தியமாகி கொண்டார். பிறகு ஜானகியின் குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு வந்து ஒரு சின்ன பங்க்ஷன் நடக்கிறது.
பிறகு அனைவரும் ஜானகி மற்றும் ராமன் இருவரும் வேலை செய்த பள்ளிக்கூடங்கள் மற்றும் பூர்விக இடங்களை பார்ப்பதற்காக அழைத்து செல்கிறார்.அப்பொழுது ஹேமா,லட்சுமி உள்ளிட்ட அனைவரும் செல்கிறார்கள். இந்த எபிசோடு நேற்று முடிவடைந்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள எபிசோடில் பாரதி கண்ணம்மா மற்றும் ஒரு நர்சிடம் மூன்று மணி அளவில் ஆபரேஷன் தியேட்டரை தயாராக வைத்திருங்கள் மேலும் ஜானகி அம்மாவையும் ரெடி செய்து வைத்திருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒருவர் வந்து ஜானகி அம்மாவிற்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறுகிறார்.
பிறகு அனைவரும் போய் பார்க்க ஜானகி இறந்து விடுகிறார். ஜானகி இருந்தது அனைவரும் அழுது கொண்டிருக்கும் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருடைய கணவர் ராமனும் இறந்து விடுகிறார். பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை அவர்களது சொந்த பொறுக்கி அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு திரைப்படம் இன்றும் அளவிற்கு எபிசோடுகளை ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.