விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் சமீப காலங்களாக இந்த சீரியல் ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் எப்படி ஒன்று சேருவார்கள் அதற்காக பலர் எப்படி உதவி செய்கிறார்கள் என்பதை மையமாக வைத்து தான் சமீப காலங்களான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது கண்ணம்மா எந்த தப்பும் செய்யவில்லை என்றாலும் பாரதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த சீரியலின் கதை எப்பொழுதே முடிந்திருக்க வேண்டும் ஆனால் மிகவும் இழுத்துக் கொண்டே போய் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான புதிய பிரபலங்கள் அறிமுகமாகிய வருகிறார்கள். அந்த வகையில் முதலில் விக்ரம் கதாபாத்திரம்,பிறகு விக்ரம் துறக்கும் மருத்துவமனையில் ஒன்றாக வேலை செய்யும் நிலைமை பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா, பிறகு வெண்பாவை திருமணம் செய்து கொள்வதற்காக ரோகித் என்ற கதாபாத்திரம்,வில்லியாக நடித்து வந்த வெண்பா தற்பொழுது டம்மியாகிவிட்டார் இவ்வாறு திடீர்திடீர் என்று பல திருப்பங்கள் இருந்து வந்தது.
இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ஜானகி,ராமன் ஆகிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகியுள்ளது. இவர்கள் இருவரும் கண்ணம்மா மற்றும் பாரதி வேலை செய்யும் மருத்துவமனையில் அட்மிட்டாகி உள்ளார்கள். இவர்களிடம் லட்சுமி, ஹேமா இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கண்ணமாவும் இவர்களை பாசமாக பார்த்துக்கொண்ட நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் அழைப்பு நீங்கள் இருவரும் உங்களுக்குள் நடந்த பிரச்சனைகளை மறந்து குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் மட்டும் தனியாக வாழ்ந்து பாருங்கள் அப்பொழுது தான் உங்களுடைய வாழ்க்கையின் அருமை தெரியும் என்று கூறுகிறார். மேலும் அதற்கான சத்தியத்தையும் வாங்குகிறார்.