அனைவரும் என்னிடம் உண்மையை மறைக்கிறார்கள் என வருத்தத்தில் இருக்கும் ஹேமா.! கண்ணம்மாவை காப்பாறியதால் ரோஹித்தை திட்டும் வெண்பா..

bhararthi-kannama-july-12
bhararthi-kannama-july-12

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல உண்மைகள் தெரியவரும் நிலையில் ஆனால் பாரதி மற்றும் கண்ணமா இருவரும் சேராமல் இருந்து வருகிறார்கள். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எரிச்சலை ஏற்படுத்திவுள்ளது.

அதாவது கண்ணம்மா மிகவும் உண்மையாக இருந்தாலும் பாரதி அதனை ஏற்றுக் கொள்ளாமல் கண்ணம்மா தப்பான வழி தான் என்று கூறி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வேறுப்பை ஏற்படுத்திவுள்ளது. தற்பொழுது லக்ஷ்மி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் ஹேமா பற்றிய தகவல் தெரிந்து விட்டது.

ஆனால் தற்பொழுது வரையிலும் பாரதிக்கு இதனை பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் இருவருக்கும் திருமண நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது அதுவும் நடக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் வெண்பா கண்ணமாவை லாரி ஏற்றி கொலை செய்வதற்காக முயற்சித்தார். லாரி கண்ணம்மாவை இடிக்க வரும் நேரத்தில் ஹேமா மற்றும் சௌந்தர்யா இரு ஒரு பார்த்து விடுகிறார்கள் உடனே சௌந்தர்யா கண்ணம்மா கண்ணம்மா என்று கூப்பிட அதனை காதில் வாங்காமல் போன் பேசி வருகிறார் கண்ணம்மா பிறகு ரோஹித் கண்ணம்மாவை காப்பாற்றி விடுகிறார்.

பிறகு ஹேமா சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மாவா என்னுடைய அம்மா பெரும் கண்ணம்மா தானே. என் சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்று என்னிடம் யாரும் சொல்லவில்லை. பிறகு கண்ணம்மா என்னுடைய அம்மா என்றால் லக்ஷ்மி என்னுடைய அக்காவா ஏன் என்னிடமிருந்து உண்மையை மறைக்கிறார்கள் என்று மனதிற்குள்ளே நினைத்து வருகிறார்.

பிறகு ரோஹித் வீட்டிற்கு சென்றதும் வெண்பா நீ தான் கண்ணம்மாவை காப்பாற்றினியா என்று கேட்க ஏன் உனக்கு இந்த வேலை எல்லாம் என்று கேட்கிறார் அதற்கு ரோகித் கண்ணம்மா என்னுடைய அக்கா என்று கூறுகிறார் உடனே வெண்பா மிகவும் கோபமடைகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.