விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒரே கதையை வைத்து சில வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் ஹேமா, லக்ஷ்மி இருவரும் தனக்கு பிறந்த குழந்தைகள்தான் என பாரதிக்கு தெரியவந்துள்ளது.
அந்த டாக்டர் பாரதியிடம் இந்த டெஸ்ட் எடுக்க உங்களுக்கு பத்து வருஷம் ஆச்சா என்ன கோபப்படுகிறார் ஆனால் எனக்கு குழந்தை பெருக்க தகுதி இல்லை என டெஸ்ட் எடுத்து பார்த்ததை பாரதி நினைத்து பார்க்கிறார். பிறகு டாக்டர் உங்கள் மனைவி மேல் எந்த தப்பும் இல்லை முதலில் ஊருக்கு சென்று குடும்பத்தோடு சேர்ந்து வாழுங்க வாழ்த்துக்கள் என கூறிவிட்டு பாரதியை அனுப்பி வைக்கிறார்.
இவ்வாறு உண்மையை தெரிந்து கொண்ட பாரதி இத்தனை வருஷமா கண்ணம்மாவை கஷ்டப்படுத்திட்டோமே எத்தனை தடவை அவமானப்படுத்தி இருப்பேன் லட்சுமி அப்பா அப்பான்னு சொல்லிக்கிட்டு வரும் பொழுதெல்லாம் உதாசீனப்படுத்திட்டேனே என நினைத்து அழுகிறார். எனவே உடனே பாரதி தன்னுடைய அம்மாவிடம் போனில் டெஸ்ட் ரிசல்ட் பற்றி பேச வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் அவசரத்தில் போனை ரூமிலேயே விட்டுவிட்டு வந்தது பிறகுதான் பாரதிக்கு தெரிய வருகிறது எனவே சீக்கிரமாக சென்னை போக வேண்டும் என ஹாஸ்பிடலில் இருந்து கிளம்புகிறார் பாரதி. ஹேமா எந்த பிரச்சனையும் இல்லாமல் மயக்கத்தில் இருந்து திரும்ப உடனே கண்ணம்மா அழுது கொண்டே எதற்காக வீட்டை விட்டுப் போன என கேட்க அப்பாவை தேடி தான் என நடந்த விஷயங்களை ஹேமா கூறுகிறார்.
பிறகு இப்பவாச்சம் என்னுடைய அப்பா யாருன்னு சொல்லுங்க என கேட்க சௌந்தர்யா நான் சொல்கிறேன் என கூறுகிறார். அப்பொழுது கண்ணம்மா அவரை தடுத்து என் பொண்ணு யாரையும் தெரிஞ்சுக்க வேணாம் என கூறுகிறார். பிறகு ஹேமா அழுவுறதைப் பார்த்து உனக்கு மனசு இரங்கலையா என கண்ணம்மாவிடம் சௌந்தர்யா கேட்க பிறகு கண்ணம்மா உடனே ஹேமா கிட்ட இப்ப உண்மைய சொன்னா என்ன ஆகும்.
உடனே இவ நீங்கதான் என் அப்பா என்று அவரை போய் கட்டிப்பிடிப்பா உடனே அவரு நான் உன்னை வளர்த்த அப்பா தான் பெத்த அப்பா இல்லை என்று சொல்லுவாரு அது மட்டுமில்லாமல் என்னைப் பற்றியும் தப்பா பேசுவாரு இதையெல்லாம் தாங்கற மனநிலை ஹேமா இல்லை இதுக்காக அப்பா யாருன்னு தெரிஞ்ச்க்காமலையே இருக்கலாம் எனக் கூறுகிறார்.
மேலும் இதனை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் என சௌந்தர்யா கூற வேணு சமாதானம் சொல்ல ஹேமாவை எப்படி அப்பா பற்றி கேட்காமல் பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் பாரதி தான் அவ அப்பான்னு தெரிஞ்சா அது ஏத்துக்கிற மனநிலையில் உங்க பிள்ளை இருக்கணும் அது வரையிலும் நானும் உண்மையை சொல்ல மாட்டேன் யாரையும் சொல்ல விட மாட்டேன் என கண்ணமா கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.