கண்ணம்மாவை நம்ம ஆரம்பித்த பாரதி.! இனிவரும் எபிசோடுகள்..

bharathi kannama 001
bharathi kannama 001

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதில் விஜய் தொலைக்காட்சியில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று சறுக்கிய நிலை ஏற்பட்டது ஏனென்றால் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எப்போ எடுப்பார் என்று மக்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் கதையே முடிந்துவிடும் அதை செய்யாமல் சீரியலை இழுத்துக்கொண்டு இருப்பதாக ரசிகர்கள் எரிச்சல் அடைகின்றனர்.

டி.ஆர்.பி-யில் பாரதிகண்ணம்மா சீரியல் சில வாரங்களாக மிகவும் பின்தங்கியுள்ளன. சோகத்தை அடைந்த இயக்குனர் எப்படியாவது பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று இயக்குனர்கள் பெரிதும் முயற்சி செய்தனர். இதனால் சீரியலில் இரண்டு கதாபாத்திரத்தை ஷர்மிளா மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு கதாபாத்திரத்தையும் சீரியலில் இறக்கியுள்ளார்.

அதாவது வெண்பாவுக்கு அம்மாவாக சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஷர்மிளா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என்று எண்ணிக் கொண்ட ரசிகர்கள் பாரதி கண்ணம்மாவை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஷர்மிளா இந்த ட்விஸ்டை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் விக்ரம் மருத்துவமனையில் சீப் டாக்டராக வேலைக்கு செல்கிறார். அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் வேலைக்கு சேருகிறார். ஒரே மருத்துவமனையில் வேலை செய்தால் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் அப்படியாவது பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரங்களாக பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலையில் இருக்கிறது. கண்ணம்மா செய்யும் செயலைப் பார்த்தால் கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை போல நம்ம தான் தவறாக புரிந்து இருக்கிறோமோ என்று பாரதி நினைக்கும் படியான காட்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது.இனி வரும் வாரங்களில் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.