விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து எந்த ஒரு மாற்றமும் பெரிதாக இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலை அப்பொழுது ஒளிபரப்புவதை நிறுத்துவீர்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வெண்பாவின் சூழ்ச்சியினால் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவை பழி வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தான்.
வெண்பாவின் ஏதாவது சூழ்ச்சி செய்து பாரதியின் மனதை மாற்றுவதில்லையே குறிக்கோளாக இருந்து வந்தாள். இவ்வாறு இந்த ஒரு கதையே மாறி மாறி ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்கள் மிகவும் எரிச்சலடைகிறார்கள். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இப்படிப்பட்ட சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் மீண்டும் டிஆர்பி-யில் இடம்பெற வேண்டும் என்பதற்காக சமீப காலங்களாக சுவாரசியமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் அகிலன் லக்ஷ்மி தான் உனது மகள் என்று கூற உடனே பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கிறான்.
அந்த டெஸ்டில் லட்சுமி தான் தனது மகள் என்பதை அறிந்து கொண்டார் பாரதி. உடனே என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணம்மாவை இப்படி சந்தேகப்பட்டு விட்டோமே என்று நினைத்து தனியாக அழுது கொண்டிருக்கிறான். இதுதான் சமீபத்தில் வந்த ப்ரோமோ தெரிய வருகிறது.