வெண்பாவிற்கு வருணை மாப்பிள்ளையாக அழைத்து வந்த ஷர்மிளா.! அதிர்ச்சியில் பாரதி.

bharathi kannama 01
bharathi kannama 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல டுவிஸ்ட்கள் அமைந்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பல புதிய நடிகர், நடிகைகளையும் அறிமுகமாகி உள்ள நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற களமிறங்கியுள்ளார்.

தற்பொழுது சர்மிளா எப்படியாவது வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.எனவே தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் நிலையில் திடீரென்று வெண்பாவை போலீசார்கள் கைது செய்கின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷர்மிதா நான் உன்னை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன் அப்படி ஜெயிலில் இருந்து வெளிவந்தால் கண்டிப்பாக நான் செல்லும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

வெண்பா வில்லியாக இருந்தாலும் தனது அம்மாவிற்கு அடங்கிய இருந்து வருகிறார்.  எனவே வேறு வழி இல்லாமல் வெண்பாவும் அம்மா சொல்லும் அனைத்தையும் கேட்டு சரி என்று சொல்லி வருகிறார் அந்த வகையில் வெண்பாவிடம் ஷர்மிளா நாளை உன்னை பொண்ணு பார்க்க வருகிறார்கள் என்று கூறுகிறார்.

அதிர்ச்சியடைந்து வெண்பா பார்த்துக் கொண்டிருக்கிறாள். பிறகு இவ்வளவு சீக்கிரமாக ஷர்மிளா மாப்பிள்ளை பார்ப்பார் என்பதை எதிர்பார்க்கவில்லை.  ஆனாலும் இதற்கு முன்பு ஷர்மிளாவிற்கு வெண்பா சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார்.  எனவே வெண்பாவை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளை யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். அந்த மாப்பிள்ளை வருணாக இருந்தால் செம ட்விஸ்ட்டாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.