விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது . ஆரம்பத்தில் இத்தொடரின் கதையானது அனைவராலும் விரும்பப்பட்டது,ஏன் தற்போதுகூட பாரதிகண்ணம்மாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டிஎன்ஏ டெஸ்ட் என்று ஒன்று எடுத்தால் இக்கதையே முடிந்துவிடும் ஆனால் அந்த ஒரு செயலை மட்டும் செய்யாமல் இக்கதையை மிக நீண்ட மாதங்களாக இழுத்துக் கொண்டே செல்கிறார்கள்.
என்னதான் கதையை இழுத்துக்கொண்டு சென்றாலும் மக்களுக்கு ஏற்றவாறு சுவாரசியமான மற்றும் விறுவிறுப்பான காட்சிகளை காட்சிப்படுத்துகிறார்கள். இக்கதையில் முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் நெட்டிசன்கள் அனைவரும் இணையதளத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வந்தனர் மேலும் கண்ணம்மாவை கேலி செய்து வந்தனர்,
அது என்னவென்றால் கண்ணம்மா கர்ப்பமாக இருந்த பொழுது வீட்டை விட்டு வெளியேறி விடுவாள் அந்நிலையில் அவள் நடந்து வெகுதூரம் செல்வாள் இதை பல்வேறு விதத்தில் எடிட் செய்து மீம்களாக இணைய தளத்தில் வெளியிட்டனர்.இன்று வெளியான பாரதிகண்ணம்மா புரோமோவில் பாரதியின் தம்பி, கண்ணம்மா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டோவாக வடிவமைத்து வீட்டிற்கு எடுத்து வருவான் இதைப்பற்றி பாரதி அவனிடம் கேட்பான், ஆனால் இறுதியில் நீங்கள் எது செய்தாலும் என் மனம் மாற போவதில்லை என்று கோபமாக சொல்லிவிடுவான்.
இந்நிலையில்தான் பாரதியின் அம்மா சௌந்தர்யா யாரோ ஒருவரை வீட்டிற்கு விருந்தாளியாக வரவேற்க உள்ளார், அவருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் யார் என்று அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர், இறுதியில் அவர் வந்தார் ஆனால் அவர் யார் என்று தான் தெரியவில்லை கதையை முழுசாக பார்த்தால் தான் அவர் யார் என்று தெரியவரும். கதையை முடிப்பார்களா முடிக்க மாட்டார்களா என்று எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்கள், இக்கதையில் அதிக திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் இறுதியில் என்ன தான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.