விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களாக அனைத்து சீரியல்களிலும் ஏராளமான திருப்பங்களை வைத்து மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து விலகிய நிலையில் வினுஷா என்ற கதாநாயகி அறிமுகமானார். இவரை ஆரம்ப கால கட்டத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வினுஷா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டார்கள்.
இப்படி நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்து நிலையில் நடிகர் விலகுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் வெண்பா பாரதியை சந்தித்து தன் மனதில் இருப்பதை கூறிவருகிறார். இன்னொரு பக்கம் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வருவதால் லக்ஷ்மி ஹேமா மகிழ்ச்சியாக இருந்த வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகிவுள்ள ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு அம்மாவாக மாறிய லக்ஷ்மி கண்ணம்மா மருத்துவமனைக்கு செல்ல கிளபி விடுகிறாள் லட்சுமி எவ்வளவு பாசமாக இருக்கிறாள் என்று கண்ணம்மா மகிழ்ச்சியடைகிறார்.
அழகு 😊
பாரதி கண்ணம்மா – இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/0ZOkqYCn63
— Vijay Television (@vijaytelevision) May 3, 2022