கண்ணம்மாவின் முன் நின்று சவால்விட்ட லக்ஷ்மி.! வீரத்தில் சௌந்தர்யாவை மிஞ்சிவிட்டாரே..

lakshmi
lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தனது அப்பா யாரென்று எட்டு வருடங்களாக  தெரியாத காரணத்தினால்  தற்பொழுது கண்ணம்மாவின் மகள் லக்ஷ்மி எப்படியாவது தனது அப்பா யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறாள்.

அந்த வகையில் லக்ஷ்மி தோழியின் அம்மா போலீசாக இருந்து வருகிறார் எனவே அவரை நேரில் சந்தித்து எனது அப்பாவை தேடி தாருங்கள் என்று கேட்கிறாள். உடனே போலீஸ் உன்னுடைய அப்பா ஃபோட்டோ இல்லை என்றால் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உடனே தேடி தந்து விடுவேன் என்று கூறுகிறார்.

அதற்கு லக்ஷ்மி நான் பிறந்ததிலிருந்து தற்போது வரையிலும் என் அப்பாவைப் பார்த்தது இல்லை அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூற பிறகு போலீஸ் லட்சுமியிடம் உனது வீட்டிற்கு சென்று ரேஷன் கார்டு மற்றும் போட்டோ ஏதாவது இருந்தால் எடுத்துவந்து என்னிடம் தந்தால்  கண்டுபிடித்து தர முயற்சிக்கிறேன் என்று கூறுகிறாள்.

லட்சுமியும் வீட்டிற்கு வந்து கண்ணம்மாவின் போனில் தனது அப்பாவின் புகைப்படம் இருக்கிறதா என்று தேடுகிறாள். அதனை கண்ணம்மா பார்க்க பிறகு போனை வாங்கி வைத்து விடுகிறான். இந்நிலையில் அடுத்த நாள் லக்ஷ்மி தனது அம்மாவிடம் பிறப்பு சான்றிதழை கேட்கிறாள்.  கண்ணம்மாவும் அதனைப் பற்றி கேட்கும்பொழுது தனது அப்பா யார் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் லக்ஷ்மி இதனை கேட்கிறாள் என்பது தெரியவந்தது.

பிறகு கண்ணம்மா 24 மணி நேரமும் அப்பாவைப் பற்றிய சிந்தனையை தானா என லக்ஷ்மியை திட்டுகிறாள். பிறகு எனது அப்பா யார் என்று தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது கூடிய சீக்கிரம் எனது அப்பா யார் என்பதை கண்டுபிடித்து காட்டுகிறேன் என கண்ணம்மாவின் முன்நின்று சவால் விடுகிறாள்.

இவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணம்மா சௌந்தர்யா போலவே இவளின் குணமும் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறாள். இவ்வாறு இனிவரும் எபிசோடு மிகவும் சுறுசுறுப்பாகவும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையிலும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.