விஜய் டிவி சீரியல்களில் டாப் சீரியலாக வளர்ந்து வரும் பாரதிகண்ணம்மா மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சமிபத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் வெண்பா செய்த சதியினால் எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார்கள். எட்டு வருடங்களாக பிரிந்திருந்தாலும் இவர்கள் மனதில் ஏதோ ஒரு மூளையில் காதல் இருந்துகொண்டிருக்கிறது.
எனவே கண்ணம்மா கடைக்கு சென்று விட்டு பிறகு வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வரும்போது வழியில் ஒரு திருடன் பாரதிவுடைய பர்சை திருடிக் கொண்டு ஓடுகிறான். அப்பொழுது பாரதி தன் காரில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்காக முன் பகுதியில் நின்று சரி செய்து கொண்டிருக்கிறான்.
அந்தத் திருடனை பார்த்த கண்ணம்மா கையிலிருக்கும் தேங்காயை எடுத்துக்கொண்டு திருடனை அடிப்பதற்கு வீசுகிறாள். இதைப் பார்த்த பாரதியும் சுதாரித்துக்கொண்டு திருடனை அடித்து உதைக்கிறான்.
இந்நிலையில் அந்தத் திருடன் பாரதியை கத்தியால் குத்த வரும்போது அதைத் தடுத்து நிறுத்தி தன் கையை இடையில் காட்டி கண்ணம்மா கத்திக்குத்தை வாங்குகிறாள்.பிறகு கண்ணம்மாவின் கையில் பட்டு கத்தி குத்தி இரத்தம் கொட்டுகிறது.
உடனே பாரதி கண்ணம்மாவை கையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறான் அங்கு கண்ணம்மாவின் கையில் ரத்த குழாய் அடைக்கப்பட்டதால் ஆபரேஷனுக்கு ரெடி பண்ணுங்க என்று டாக்டர் பாரதி நர்ஸிடம் கூறுகிறார்.
இதை அனைத்தையும் பார்த்து ஷாக்கான வெண்பா கண்ணம்மாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் பாரதி துடி துடித்து போகிறான் என்று மேலும் எரிச்சலை தருகிறது. வெண்பாவுக்கு இதில் ஷாக்கான வெண்பா பாரதி கண்ணம்மாவை நிரந்தரமாக பிரிக்க வேண்டும். இந்த சம்பவத்தை பார்த்த பின் வெண்பா ஷாக்காகி உள்ளார்.