பாரதியை மறந்துடுங்க என வெண்பாவிற்கு அட்வைஸ் சொல்லும் சாந்தி.! குடும்பத்துடன் மருத்துவமனையில் ஜாலியாக இருக்கும் கண்ணம்மா..

bharathi kannama today
bharathi kannama today

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெண்பாவின் வருங்கால கணவர் யார் என்பதை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

வேண்பாவின் சதித் திட்டத்தால் பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எப்படி இணைவார்கள் என்பதை நோக்கி தான் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. முன்பெல்லாம் பாரதி வெண்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஓவராக ஆடிவந்தான்.

ஆனால் வெண்பாவின் அம்மா எப்பொழுது சீரியலுக்கு அறிமுகமானாறோ அதிலிருந்து வெண்பா அடங்கி ஒடுங்கிப் போய் ஒழுங்காக வீட்டில் இருந்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் அவளின் அம்மா சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.

என்னதான் சத்தியம் செய்து கொடுத்தாலும் வெண்பாவிற்கு அது எல்லாம் சாதாரண விஷயம் இப்படிப்பட்ட நிலையில் வெண்பாவை பொண்ணு பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ஒருவரை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் வெண்பா ஷர்மிளா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு வருகிறார்.

எனவே சாந்தி நான் சொல்வது உங்களுக்கு கோபம் வரலாம் ஆனால் என்ன செய்வது நீங்கதான் இந்த பாரதி நம்பிக் கொண்டிருக்கிங்க ஆனா பாரதி உங்களை கொஞ்சம் கூட மதிக்கல நீங்க ஜெயிலுக்கு போனீங்களே அவருக்கு உங்க மீது பாசம் இருந்திருந்தா உங்களுக்கு உதவி செய்திருப்பார்.  இப்ப வீட்டுக்கு வந்தும் ஒரு போன் கூட செய்து என்னனு கேட்கல எனவே அவரை மறந்துவிட்டு உங்க அம்மா சொல்வது படி செய்தால் தான் நல்லா இருக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு வெண்பா நான் சின்ன வயதில் இருந்து ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்து விட்டேன் நான் டாக்டராக வேண்டும் என நினைத்தேன் அதனையும் கஷ்டப்பட்டு படித்தேன்,இதேபோல் எல்லாமே என் அம்மா எனக்கு பண்ணிட்டாங்க அதேபோல் ஆசைப்பட்டதை எப்படி மறக்க முடியும் வருத்தப்படுகிறார்.பிறகு பாரதி உன்னை சும்மா விடமாட்டேன் என தனக்குள்ளே சொல்கிறார்.

இன்னொரு பக்கம் கண்ணம்மாவிடம் ஒரு பெண் யாரப்பா வெளியில் உட்கார்ந்து இருப்பது உங்கள் மகள் என்று கேட்டதற்கு ஆமாம் என்று கண்ணம்மா கூறுகிறார் நன்றாக பேசுகிறார் உங்கள் மகள் என்று கூறிவிட்டு அந்த குழந்தையுடன் இருப்பது யார் என்று கேட்டதற்கு அதுதான் அவர்களின் பாட்டு என்று கூறுகிறார்.

பிறகு ஹேமாவை பார்த்து இது தான் பாரதி சாரின் பொண்ணா என கேட்க கண்ணம்மா ஆமாம் என கூறுகிறார் பாரதி சார் மிகவும் நல்லவர் காலையில் நடந்த பிரச்சனைகள் பெண்ணைய எப்படி மதிக்க வேண்டும் என்பதை நன்றாக கூறினார் என்று கூறுகிறார் அந்தப் பெண். பின் ஹேமா, லக்ஷ்மி,சௌந்தர்யா கண்ணம்மா சாப்பிட வருகின்றனர்.

அப்பொழுது சௌந்தர்யா இங்கே சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என சொல்ல பாரதிய இருவரும் கூப்பிட சொல்கின்றனர் லக்ஷ்மி அம்மா வரும் வரை இங்கே இருப்பதாக சொல்ல அதைக்கேட்டு பாரதி அதிக கோபம் வருகிறது. பின் அவரை அழைத்துக் கொண்டு சாப்பிட சொல்லுங்க அந்த நேரம் நோயாளி ஒருவர் வர பாரதி போனைக் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் பாரதிக்கு வெண்பா போன் செய்ய ஹேமா கண்ணம்மாவை பேச சொல்கிறார். கண்ணம்மாவும் வெண்பாவிடம் பேசத் தொடங்குகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.