அடுத்தவனை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு என பாரதியை கிழித்தேடுக்கும் ரசிகர்கள்.! இன்றைய ப்ரோமோ.

bharathi kannama 002
bharathi kannama 002

விஜய் டிவியில் தொடர்ந்து அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா இந்த சீரியல் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறதோ அந்த அளவிற்கு கலாய்க்கப்பட்டும் வருகிறது.

இந்த சீரியலில் தொடர்ந்து பல டுவிஸ்ட்கள் இருந்துவரும் நிலையில் தற்போது வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற கேரக்டரை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  வெண்பாவை திருமணம் செய்யக் கோள்ள வேண்டும் என்று மிரட்டி வரும் நிலையில் விரைவில் வெண்பாவிற்கு திருமணமாக இருக்கிறது.

வெண்பாவால் கடந்த 9 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரும் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பி வருகிறார்கள். ஹேமாவிற்கு தனது அம்மா கண்ணம்மா தான் என்று தெரியவில்லை என்றாலும் லட்சுமிக்கு தனது அப்பா பாதி தான் என்பதை கண்டுபிடித்து விட்டாள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாரதி பணியாற்றிவரும் ஹாஸ்பிடலில் கண்ணம்மாவும் பணியாற்றி வருகிறார் எனவே தற்போது இருவரும் அடிக்கடி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்து வருகிறார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண்ணிற்கு மண்டை உடைந்து ரத்தம் வர அவரின் கணவர் மருத்துவமனையில் சேர்க்கிறார்.

அந்தப் பெண்ணின் மண்டையை அந்த கணவர்தான் அடித்து உடைத்துள்ளார்.  இதனைக் கண்டுபிடித்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் போலீசாரிடம் அவன் மீது கேஸ் கொடுத்துள்ளார்கள்.  அந்த குடிகாரன் கண்ணம்மா விட அதிகமாக பேச பாரதியும் பெண்களைப்பற்றி வீரவசனம் பேசி வருகிறார்.  இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நீயும் உன் பொண்டாட்டியை சந்தேகப்பட்டு தான் வர அடுத்தவனை குறை சொல்லாதே என்று கூறி வருகிறார்கள்.