வெண்பாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா.! செம டுவிஸ்ட் வைத்த ஷர்மிளா.. வெளிவந்த இன்றைய ப்ரோமோ

venpa 1
venpa 1

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்ட்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் 9 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா தற்போது ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வருவதால் அடிக்கடி பார்த்துக் கொள்கிறார்கள். புதிய மருத்துவமனை ஒன்றில் பாரதி சிறப்பு மருத்துவராகவும் அதில் கண்ணம்மா கேண்டீனிலும் பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதி கண்ணம்மா இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள். அதற்கு சௌந்தர்யா மற்றும் அகில் என அனைவரும் பல திட்டங்களை போட்டு வருகிறார்கள்.

இவ்வாறு பாரதி மற்றும் கண்ணம்மா இவர்களின் பிரிவிற்கு காரணமான வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என தற்பொழுது வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற கேரக்டரை களமிறக்கி உள்ளார்கள்.  ஷர்மிளா வெண்பாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் கறாராக இருந்து வருகிறார்.

வெண்பா ஷர்மிளாவுக்கு பயந்து நீங்கள் சொல்லும் பையனை திருமணம் செய்து கொள்கிறேன் என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். எனவே சமீபத்தில் வெண்பாவிடம் ஷர்மிளா உன்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வருகிறார்கள் ரெடியாக இரு என்று கூறியதும் வெண்பா யார் அந்த மாப்பிள்ளை என்று யோசித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வந்துள்ள ப்ரோமோவில் ஷர்மிளா துர்காவை தான் வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவெடத்து உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது எனவே துர்காவை பார்த்ததும் வெண்பாவிற்கு அதிர்ச்சியாக இருக்கும்.