விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா என்னதான் இரு வேளைகளும் ஒளிபரப்பபட்டாலும் இரவு வேளைகளில் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பி பார்க்க படுகிறது.
இந்த நாடகத்தில் பாரதி அவ்வப்போது வெண்பாவை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த போதும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அதற்கு காரணம் பாரதியின் குடும்பத்தினர் ஆவர். பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெண்பா மிக நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் இந்த நாடகத்தில் வெண்பாவின் அம்மா என்ட்ரி கொடுத்த பிறகு அவ்வளவு எளிதாக வெண்பாவால் எதையும் சாதிக்க இயலவில்லை.
தற்போது புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையில் பாரதி சிறப்பு மருத்துவராகவும்,கண்ணம்மா அட்மின் ஆபீசராகவும் பணியாற்றி வருகின்றனர் இது இவர்களுக்கு இடையில் சிறு நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.
இதனால் கடுப்பாகும் வெண்பா என்ன செய்ய நினைத்தாலும் வெண்பாவின் அம்மா இருக்கும் வரை அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. தற்போது வெளியான பாரதி கண்ணம்மா வின் புரோமோ வீடியோவில் வெண்பா பாரதியை தேடிச்சென்று “உன்னோட ஃப்ரெண்டு பிரச்சனையில் இருக்கும் போது அவளுக்கு ஹெல்ப் பண்ணணுங்கிற மேனர்ஸ் கூட இல்ல பாரதி உனக்கு, ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ” அப்படின்னு சொல்றாங்க அதன் பின் வீட்டுக்கு வந்த வெண்பா முடியை பிச்சுக்கொண்டு அழுகிறார்.
அதற்கு அவங்க வீட்டுல இருந்த வேலைக்கார பெண் ஏன் இவ்வளவு கோவமா இருக்கீங்க? அப்படின்னு கேக்குறாங்க அதற்கு வெண்பா நான் பாரதிய “ஐ ஹேட் யூன்னு” சொல்லிட்டன்னு சொல்லுறாங்க திடீர்னு வந்த வெண்பாவோட அம்மா சபாஷ் சபாஷ் அப்படின்னு சொல்லி கைதட்டிக் கொண்டே “இப்பதான் வெண்பா நீ என்னோட பொண்ணு, இப்பவாச்சும் நான் சொல்ற பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில் உருப்புட்ற வழிய பாரு’ அப்படின்னு சொல்லுறாங்க இத்தோட புரோமோவும் முடிவடைந்தது.
அம்மா பேச்ச கொஞ்சம் கேளுங்க வெண்பா.. 😜
பாரதி கண்ணம்மா – திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/vGuW8R1FQJ
— Vijay Television (@vijaytelevision) May 3, 2022