விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் டிஆர்பி-யில் முதன்மை வகிக்கும் நாடகமான பாரதி கண்ணம்மா மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நாடகமாகும்.இந்த நாடகத்தில் விக்ரம் என்பவர் புதிதாக மருத்துவமனை ஆரம்பிக்கிறார் அதில் பாரதி முக்கிய மருத்துவராகவும், கண்ணம்மா அட்மின் ஆஃபிஸராகவும் பணியாற்றி வந்த நிலையில் மருத்துவமனைக்கு ஒரு பெண் தலையில் அடிபட்டு வருகிறார்.
அதற்கு காரணம் அவரது குடிகார கணவன் என்று கண்ணம்மா கண்டுபிடித்து விடுகிறார் அதன் பிறகு அந்த கணவனை பாரதி போலீசிடம் ஒப்படைக்கிறார். இதுபற்றி பாரதி தனது அம்மாவிடம் கூறும் பொழுது இவனைப் போல் ஆட்கள் ஏன் உள்ளனர் என்று தெரியவில்லை, கல்லானாலும் கனவன் புல்லானாலும் புருஷன் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இன்னும் இந்த காலத்தில் பொண்ணுங்க இப்படி இருக்காங்களா?? அப்படின்னு கேட்கிறார் பாரதி.
அதற்கு பாரதியின் அம்மா சௌந்தர்யா ஒரு விஷயத்தை நீ யோசித்தாயா? அந்த குடிகார கணவனின் மனைவியை போல்தான் கண்ணம்மாவும் என்று கூறுகிறார்,அதன்பிறகு நீதான் கடவுள், நீதான் அம்மா அப்பா, எல்லாமே நீதான் அப்படின்னு ஒன்ன நம்பி வந்த பொண்ணு அவ ஆனா அவள நீ வெளிய அனுப்பிட்டாய் என்று கூறுகிறார் சௌந்தர்யா, இதை கேட்டதும் பாரதி உடனே சட்டென்று திரும்பி ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.
அதன்பிறகு இறுதியில் பாரதி நான் ஒன்னும் சந்தேகப்படவில்லை நான் எதை கண்ணால் பார்த்தேனோ அதை வைத்து அவளை விட்டு விலகி நிற்கிறேன், நீங்க எல்லோரும் பிரம்மையில் உள்ளனர்! நான் இல்லை என்று கூறுகிறார்.
“கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்னும் பழங்கால பழமொழி உண்டு அதற்கேற்றவாறு அனைத்தும் அமைந்தால் எவ்வித பிரச்சினையும் வராது என்பதற்கு இந்த நாடகம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.