விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு வழியாக தற்பொழுது இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதற்குள் இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மாவின் முதல் சீசன் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தார்கள்.
மேலும் கதைய இழுத்துக் கொண்டே போனதால் இந்த சீரியலின் இயக்குனரை கூட விமர்சனம் செய்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடியப்போகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்படடு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் நடித்து வந்த நிலையில் முதலில் ஹீரோயினாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார் அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் எனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார். தன்னுடைய தாயை இழந்த கண்ணம்மா சித்தி கொடுமையினால் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
பிறகு பாரதி காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள எப்படியாவது கண்ணம்மாவை சாகடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள் பல பிரச்சனைகளுக்குப் பிறகு பாரதி கண்ணம்மா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர வெண்பா கதாபாத்திரத்தினால் இவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டு பாரதியின் சந்தேகத்தால் கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்புகிறார்.
இவ்வாறு பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் பாரதி கண்ணம்மா 10 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் இணைந்துள்ளார்கள் எனவே இவர்களுடைய திருமண வைபோகும் நிகழ்ச்சி தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது இதில் சினேகன் அவருடைய மனைவி கன்னிகா மற்றும் ஆர்ஜே பாலாஜி, பிக்பாஸ் ஷிவின் ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.
இவர்களுடைய திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது இவ்வாறு ஒரு வழியாக பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்துள்ள நிலையில் புதிய கதையுடன் பாரதி கண்ணம்மா 2 சீரியல் உருவாக இருப்பதாக சில தகவல்கள் வெளியானது மேலும் அதன் ப்ரோமோ வெளியாகி அந்த தகவலை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் சன் டிவி ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக வினுஷா தேவி நடிக்கிறார் இதோ அந்த ப்ரோமோ.