தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது விஜய் டிவி. விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் விஜய் டிவி டப் கொடுத்து வருகிறது.
தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் பாரதி கண்ணம்மா எப்பொழுது இணைவார்கள் என்றும் லக்ஷ்மி மற்றும் ஹேமாவிற்கு எப்பொழுது தனது பெற்றோர்களை பற்றி தெரியும் என மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்ற வாரம் ஒளிபரப்பான எபிசொடில் கண்ணம்மாவின் பிறந்த நாளன்று தனது மகள் லட்சுமியிடம் உங்க அப்பா யார் என சொல்கிறேன் என்று கூறியிருந்தார் எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வந்தனர் லட்சுமி மற்றும் ஹேமா தெரிந்ததும் இந்த சீரியல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெண்பா பல திட்டங்களை போட்டு ஹேமாவிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். சமீபத்தில் ஸ்கூலுக்கு சென்று ஹேமா எப்படி படித்து வருகிறது என்று ஹெட் மாஸ்டரிடம் கேட்டிருந்தாள் அதனை தொடர்ந்து பிரியாணி செய்து கொண்டு சென்றிருந்தாள்.
இவர் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிய போவதாகவும் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரும் பெரிய பெண்களாக வளர்ந்துள்ளனர்.
அதோடு இருவரும் இணைந்து தனது அம்மா அப்பாவை தேடி வருகிறார்கள். இவ்வாறு விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் விரைவில் முடிய வேண்டும் என்றும் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக வேண்டும் என்றும் மிகவும் ஆவலாக காத்து வருகின்றனர் ரசிகர்கள்.