விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது பிறகு பாரதியார் எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார் என்ற சுவாரசியத்துடன் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஒரே கதையை தொடர்ந்து சிறிதுகூட மாற்றம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் இந்த சீரியலை வேறுத்துள்ளனர். இதன் காரணமாக இந்த சீரியல் டிஆர்பி-யில் இருந்து மொத்தமாக தூக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் முதல் பாகத்தினை தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்பொழுது பாரதி வெண்பாவிற்கு தாலி கட்டுவதாக ஒத்துக் கொண்டுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் இதே நேரத்தில் பாரதியிடம் ஒரு பெண் சிகிச்சைக்காக வர அவருடைய கணவர் அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறார்.
அந்த குழந்தை என்னுடையது இல்லை எனக் கூற பிறகு பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் அனைத்து பிரச்சனைகளும் தெரிந்து விடும் எனக் கூறுகிறார். இதனை பார்த்தவுடன் கண்ணம்மா ஊருக்கு தான் உபதேசம் ஏன் அந்த டிஎன்ஏ டெஸ்ட்டை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம் எனக் கூற பாரதியும் DNA டெஸ்ட் எடுப்பதற்காக யோசிக்கிறார்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் லட்சுமி, ஹேமா வளர்ந்த பின் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பகுதி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் தற்போது இந்த சீரியலில் நடித்து வரும் கண்ணம்மா ரோலில் வினோஷா தேவி நடிக்க இருக்கிறாராம் மீதி அனைத்து கேரக்டர்களும் மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.