விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று இதில் கதாநாயகியாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை ரோஷினி.
இவர் சில மாதங்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலை விட்டு விலகிவிட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பெரிதளவில் சோகத்தை அடைந்தனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் புதிய கண்ணம்மா வாக வினுஷா தேவி என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் உலகெங்கிலும் பிரபலமான நடிகை ரோஷினி,இந்த சீரியலுக்கு கதாநாயகியாக கதாபாத்திரத்திற்கு தேர்வு எடுக்கும்போது நடிகை ரோஷினி தேர்வாக இல்லையாம் முதன்முதலில் கண்ணம்மாவாக நடிக்க இருந்தது பவித்ரா ரெட்டி என்பவராம். “இது என்னடா புது டுவிஷ்ட்டா இருக்கு….”என்று ரசிகர்களுக்கு ஷாக்காக இருக்கிறது.
ஆனால் அப்போது சில காரணங்களால் பவித்ரா ரெட்டியால் நடிக்க முடியாமல் போனது அதன்பிறகு, நடிகை ரோஷினி கண்ணம்மாவாக நடிக்க ஒத்துக்கொண்டார். என்பது போல் தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை அவர்களே சொல்லும் வரை நம்பாமல் இருக்கலாம் என்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து இனிமேலாவது கண்ணம்மாவை மாற்ற வேண்டாம் என்று புலம்பி வருகிறார்கள் நடிகை ரோஷினி நடிப்புக்கு இணையாக வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து வருகிறார். ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.