பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஷினி.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

bharathi kannama 6
bharathi kannama 6

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து தொடர்ந்து ஒரே கதையை வைத்து ஒளிபரப்பி வருவதால் தற்போது டிஆர்பி-யில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

மீண்டும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல டுவிஸ்டுகளை வைத்து புதிய நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது எல்லாம் அடிக்கடி பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

எனவே விரைவில் கண்ணம்மா பற்றிய தகவல்களை பாரதி தெரிந்து கொண்டு இருவரும் இணைவார்கள் என்று மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது விக்ரம் சென்னையில் புதிதாக ஒரு மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார். விக்ரமுக்கு சமூக நலனின் மீது ஆர்வம் இருப்பதாகவும் எளிய மக்களிடம் நேராக சென்று இலவசமாக மருந்து செலவுகளை பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

எனவே பாரதிக்கு சமீபத்தில்  சிறந்த மனிதநேய மருத்துவர் என்கின்ற விருது வழங்கப்படுகிறது. அந்த விருதினை லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரின் கைகளால் வாங்குகிறார். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் பாரதி தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார்.

அதே மருத்துவமனையில் அட்மின் ஆபிசராக பணியில் சேர்ந்துள்ளார் கண்ணம்மா. எனவே நாள்தோறும் கண்ணம்மாவை பாரதி பார்க்க வேண்டும் என மிகவும் கடுப்பாகிறான். இவ்வாறு இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் இப்படி மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில்  மீண்டும் ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.