அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யின் உச்சியில் இருந்து வந்து தற்பொழுது ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு டிஆர்பி-யின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து ஒரே விஷயத்தை மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் தற்பொழுது இந்த சீரியலில் எப்பொழுது ஒளிபரப்புவதை நிறுத்திவீர்கள் என பல கமெண்டுகளை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தான் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இருக்கும் படியான சில காட்சிகள் இடம்பெற்று வருகிறது. இவ்வாறு பாரதி கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து தற்பொழுது திருமணமாகி விவாகரத்தான பிறகும் வெண்பா எப்படியாவது பாரதியை அடைந்துவிட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர்களை பிரிக்கும் வகையில் ஏராளமான சதித் திட்டங்களை போட்டு கேவலமாக செயல்களை செய்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக மனைவி மகளுடன் சேர்ந்து வாழ விடாமல் வைத்திருக்கிறார். எப்படியாவது பாரதி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகளை செய்தும் எதுவும் சரியாக நடக்கவில்லை.
இவ்வாறு பாரதியுடன் தான் சேரவில்லை என்றால் கண்ணம்மாவுடனும் சேர விடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெண்பாவின் வீட்டில் வேலைக்காரி சாந்தி ஜோசியர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வர வெண்பாவின் கையை பார்த்துவிட்டு உங்களுக்கு கல்யாணம் யோகம் வந்துவிட்டது என கூற உடனே சாந்தி நீங்கள் காதலித்து வரும் பாரதியை திருமணம் செய்துகொள்ள போறீங்களா என்று கூறுகிறாள் உடனே ஜோசியக்காரன் நீங்கள் விரும்பு வரை அல்ல உங்களை விரும்பு வரை தான் திருமணம் செய்து கொள்ள போறீங்க என்று அதிர்ச்சியை தெரிவிக்கிறான்.
எனவே இதனை வைத்து பார்க்கும் பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் புதிய கதாநாயகன் ஒருவர் பாரதிக்கு போட்டியாக அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது எனவே அந்த புதிய கதாபாத்திரம் அறிமுகமானதும் வெண்பாவின் ஆட்டத்தை அடக்கி மீண்டும் இந்த சீரியல் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.