விஜய் தொலைக்காட்சி தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வரும் நாடகங்களில் பாரதி கண்ணம்மா என்னும் நாடக தொடரும் உண்டு. ஏனென்றால் இந்த நாடகம் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்க பட்ட ஒன்று தற்போதும் இந்த நாடகம் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது .இந்த நாடகத்தில் வரும் “பாரதி காதலியே கண்ணம்மா” என்னும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று.
பாரதி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வெண்பாவின் சூழ்ச்சி செயல்களால் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைகள் என்னுடையது இல்லை என்று நினைத்து, கண்ணம்மாவிடம் நீ வேறு யாருக்கோ பெற்றுள்ளாய் என்ற சந்தேகத்துடன் கூறுகிறார். இதனால்தான், பல வருடங்கள் பாரதியை பிரிந்து தனது குழந்தையுடன் இருக்கும் கண்ணம்மா நான் தனியாகவே வாழ்ந்து காட்டுவேன் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறார்.
நீ எங்கேயோ செல் எனக்கு என்ன என்று பாரதி உள்ளார், இந்நிலையில் தான் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று சௌவுந்தர்யாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு விருந்தாளியாக வருகிறார் அவர்களது வீட்டில் மிகவும் குதூகலமாக உள்ளார். மேலும் இப்பிரச்சினைக்கு எல்லாம் காரணமான வெண்பாவை யாரோ ஒரு நபர் தொலைபேசியில் மிரட்டி வருகிறார்.
இவ்வாறு இரு நபர்கள் உள்ள நிலையில் புதிதாக பாரதியை ஒரு நபர் சந்திக்கிறார் அவர் பிரபல நடிகையான மற்றும் பிக்பாஸ் பிரபலமான, ரேகா என்பவர்தான்,ஆனால் இவர் எந்த கேரக்டர்? என்ன என்ட்ரி கொடுத்துள்ளார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.