பொதுவாக ஒருவர் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைய வேண்டும் என்றால் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஃபரீனா. இவர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் கொடூர வில்லியாக அந்த சீரியலில் நடித்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் சாப்ட்டானவர் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். இவர் குழந்தை பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு வரையிலும் சீரியலில் நடித்து வந்தார். பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பிறகு சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிப்பது தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் ஃபரீனா மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்கள் வெளியிடுவது தனது குழந்தையின் க்யூட்டான வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஃபரீனாவை யாரோ ஏமாற்றி விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தற்பொழுதெல்லாம் சோசியல் மீடியா பிளாட்பார்மில் சில மோசமான பிளாட்பார்ம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஃபரீனாவிடம் சோசியல் மீடியா நிறுவனம் எங்களுடைய சேனலில் உங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்தால் உங்களுக்கு அதிகமாக பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி பிறகு இதன் மூலம் அந்த சோசியல் மீடியா பிளாட்பார்மை சேர்ந்தவர்கள் பணத்தை சம்பாதித்துக் கொண்டு ஃபரீனாவிடம் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்களாம். இதனால் ஆத்திரமடைந்த ஃபரீனா என்னை ஏமாத்திட்டாங்க இவ்வளவு கேவலமா இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை என்று கூறி ஆத்திரமடையும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.