சின்னத்திரையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் வெள்ளித் திரைகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்து வருகிறதோ அதே போல் சின்னத்திரைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சின்னத்திரை பார்ப்பதற்கு என்றே தனி ஒரு கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக டாப்பில் இருந்து வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் கண்மணி மனோகரன் இவர் இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் மாடலாக தான் பணியாற்றி வந்தார் பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாரதிகண்ணம்மா சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பிறகு ஜீ தமிழ் ஒளிபரப்பான சூப்பர் குயின் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் கவர்ந்தவர். இதனை தொடர்ந்து தற்போது இவர் ஜீ தமிழ் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்து வைரலானது.
இவர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த சீரியல் அமுதாவும் வரலட்சுமியும் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த ப்ரோமோ வெளிவந்து வைரலாகி வருகிறது.இதோ அந்த புரோமோ.