விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா நாடக தொடர் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்னதான் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் இதன் மீது உள்ள ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை. நாடகத்தில் விக்ரம் என்பவர் புதிதாக மருத்துவமனை ஆரம்பிக்கிறார் அதில் பாரதி முக்கிய மருத்துவராகவும், கண்ணம்மா அட்மின் ஆஃபிஸராகவும் பணியாற்றுகின்றனர்.
இது பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இனைய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று பாரதியின் அம்மா சௌந்தர்யா நம்புகிறார். இப்படியிருக்க பாரதிகண்ணம்மா நாடகத்தின் வீடியோவில் மருத்துவமனைக்கு ஒரு பெண் தலை அடிபட்ட நிலையில் தன் கணவருடன் வருகிறார்.
ரத்தம் வழியவழிய வலியில் துடிக்கும் அந்த பெண்ணிற்கு பாரதி மருத்துவம் பார்க்கிறார், என்ன ஆயிற்று? என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார் கண்ணம்மா, அதற்கு அந்தப் பெண் வழுக்கி கீழே விழுந்து விட்டேன் என்று கூறினார், மீண்டும் அந்தப் பெண்ணின் கணவரிடம் என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு கணவர் கண்ணாடி பொருள் தலையில் விழுந்துவிட்டது என்று கூறுகிறார்.
இப்படி மாற்றி மாற்றி கூறியதால் சந்தேகமடைந்த கண்ணம்மா அந்தப் பெண்ணிடம் உன் கணவருக்கு பயப்படாதே உண்மையைச் சொல் என்று கூறுகிறார் அதற்கு அந்த பெண் “என் கனவன் குடித்துவிட்டு சந்தேகத்தில் என்னை அடித்துவிட்டார்” என்று கூறுகிறார், கண்ணம்மா பாரதியிடம் இது பற்றி கூறுகிறார்.
பாரதியும் போலீசிடம் புகார் அளித்ததன் காரணமாக மருத்துவமனைக்கு வந்த போலீஸ் “கட்டின மனைவியை சந்தேகப்படுகிறாயே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா” என்று பாரதியின் காதில் கேட்கும்படி அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்தது போலீஸ்.