பாரதி கண்ணம்மா 2வில் நடந்த மிகப்பெரிய மாற்றம்.! போலீசிடம் மாட்டிக் கொண்டு பொய் சொன்னா சித்ரா..

bharathi-kannama-2
bharathi-kannama-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்து சமீபத்தில் நிறைவு பெற்ற சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகம் மூன்று வருடங்களுக்கு பிறகு முடிந்த நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலில் சித்ரா தான் செய்யாத தப்புக்காக ஜெயிலில் இருந்து வருகிறார்.

பிறகு அங்கு சிலர் செய்த தவறுகளை போலீசார்களிடம் கூறியதால் சித்ராவை விடுவிக்கின்றனர் ஆனால் ஜெயிலில் இருப்பவர்கள் சித்ராவை தீர்த்தக்கட்ட முடிவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சித்ரா தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்திற்கு செல்கிறார் அப்பொழுது சித்ராவின் அத்தை வீட்டில் இருக்கும் நகைகளை திருடிட்டு போறியா எனக் கேட்க அந்த நேரத்தில் சித்ராவின் மாமன் வீட்டில் தான் நகைகள் இருப்பதாக கூறுகிறார்.

இவர் போகும் அதே பேருந்தில் கண்ணம்மாவும் வர இருவரும் நண்பர்கள் ஆகிவிடுகின்றனர் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர் இந்த நேரத்தில் சாப்பிடுவதற்காக இறங்க அங்கு சித்ராவை கொல்வதற்காக சில ரவுடிகள் வருகின்றனர் அந்த நேரத்தில் கண்ணம்மா சித்ராவை காப்பாற்றுவதற்காக கத்திக்குத்தை வாங்குகிறார்.

இதனால் கண்ணம்மா இறக்கப்போகும் நேரத்தில் சித்ராவிடம் என்னுடைய அம்மா எனக்காக அவங்க காத்துகிட்டு இருப்பாங்க நீ தான் அவங்கள போய் பார்த்துக்கணும் என கூறுகிறார். இந்நிலையில் போலீஸார்கள் வந்து சித்ராவிடம் உன்னுடைய பெயர் என்ன என கேட்க ஏற்கனவே ஜெயிலில் இருந்து வந்ததால் மீண்டும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தன்னுடைய பெயரை கண்ணம்மா என கூறுகிறார் இவ்வாறு பல திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.