விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்தவகையில் வெண்பாவின் சூழ்ச்சியினால் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக பிரிந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது தனது மகள்களுக்காக ஓரளவிற்கு சேர்ந்து வெளியில் போக ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் எப்படியாவது இணைந்து விட வேண்டும் என்பதற்காக சௌந்தர்யா மற்றும் அகிலன் என அனைவரும் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் கண்ணம்மாவின் மீது பாரதிக்கு இருக்கும் சந்தேகத்தால் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் ஹேமா எப்படியாவது தனது அப்பாவிற்கு கண்ணம்மாவை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக கண்ம்மாவிடம் அப்பாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் லக்ஷ்மி டாக்டர் அப்பா என பாரதி பின்னாடியே சுற்றி வருகிறாள். லக்ஷ்மிக்கு டாக்டர் தான் தனது அப்பா என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அதிகமாக தனது அப்பாவுடன் இருக்க ஆசைப்படுகிறான்.
இப்படிப்பட்ட நிலையில் பல திருப்பங்கள் இருந்துவரும் நிலையில் தற்பொழுது பாரதியை சந்தித்து வெண்பா நீ டைவோர்ஸ் விஷயத்தில் தெளிவாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு டிவோர்ஸ் ஆகிவிடும் எனக்கூறி பலவற்றையும் சொல்லி வருகிறாள் இதனை எல்லாம் கேட்டு பாரதி மிகவும் கோபமடைந்த என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும் நீ உன் வேலைய போய் பார் என அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டான் இதுதான் இன்றைய எபிசோட்.