விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களான பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள். இன்று ஹேமா மாற்றம் லட்சுமியின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் மிகவும் கோலாகலமாக அதோட மட்டுமல்லாமல் தற்பொழுது பிறந்தநாள் விழாவிற்கு பெண்பாவம் வந்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் ஹேமாவின் பிறந்தநாள் என்பதால் ஹேமா தனது பிறந்தநாள் பரிசாக பாரதியிடம் தனது அம்மாவை காட்டும்படி கேட்டு இருந்தார் எனவே பாரதி ஒரு பெண்ணின் புகைப்படத்தை வரைந்து இவர்தான் உன் அம்மா என கூறுகிறார். இதனைப் பார்த்து கோபமடைந்த கண்ணம்மா ஸ்டேஜ் மேல ஏறி எனக்கு பிறந்தது இரட்டைக் குழந்தை அதில் ஒன்றை அத்தை தூக்கிட்டு வந்துட்டாங்க.
அந்த குழந்தை தான் ஹேமா,ஹேமா என்னுடைய மகள் என கூறுகிறார். பிறகு பாரதி இவ என்னமா லூசாட்டம் பேசுறா நீங்க சொல்லுங்க என கூற சௌந்தர்யா ஆமா, ஹேமா கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைதான் எனக் கூறுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சியடைகிறார். பிறகு ஹேமா கண்ணம்மாவை பார்த்து அம்மா என கூப்பிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று சந்தியா மற்றும் சரவணன் கல்யாண நாள் என்பதால் சரவணன் சந்தியாவிற்கு போலீஸ் டிரசை பிறந்தநாள் பரிசாக வழங்குகிறார். எனவே ரூமில் போலீஸ் டிரசை போட்டு பார்த்து சந்தியா ரசித்துக்கொண்டிருக்கிறார் இதனை பார்த்த கண்ணம்மா இருங்க நான் சரவணன் அழைத்து வருகிறேன் எனக் கூறுகிறார்.
சந்தியா வேண்டாம் எனக் கூற இதுவரையிலும் அவர் என்னை போலீஸ் டிரஸ்சில் பார்த்ததே இல்லை எனவும் கூறுகிறார் இதன் காரணமாக இருங்கள் நான் சரவணன் அழைத்து வரேன் என கண்ணம்மா செல்கிறார் உடனே கதவின் சத்தம் கேட்க சரவணன் என நினைத்து கண்ணம்மா போகிறார் ஆனால் கதவை திறந்தவுடன் சௌந்தர்யா மற்றும் சிவகாமி இருவரும் நிற்கிறார்கள்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் கண்ணம்மா பிறகு சௌந்தர்யா சிவகாமிக்கு டயர்டாக இருக்கிறதா எனவே ரெஸ்ட் எடுக்கட்டும் எனக் கூறுகிறார். பிறகு ரூமிற்குள் போனதும் சந்தியா போலீஸ் டிரஸ்ஸில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி அமைதியாக ரூமை விட்டு வெளியேறுகிறார். இந்த நேரத்தில் சரவணன் உள்ளே வந்து சந்தியா போலீஸ் டிரெஸ்ஸில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.