சிவகாமியின் மீது திருட்டுப் பழியை போட்ட சாமியார்.! அதிர்ச்சியில் சந்தியா மற்றும் கண்ணம்மா..

bharathi-kannama-raja-rani-2
bharathi-kannama-raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஸ்பெஷலாக ஒளிப்பரப்பி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து சன் டிவி சீரியல் சன் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருவதால் விஜய் டிவி டிஆர்பி எதிர வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் பாரதி,கண்ணம்மா இருவரும் ஹேமா,லட்சுமியுடன் சிவகாமியின் ஊருக்கு செல்கிறார்கள். தற்போது சிவகாமியின் குடும்பத்திலேயே ஏற்கனவே பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சந்தியா போலீஸ்சிடம் போலி சாமியார் என அவர் மீது வழக்கு கொடுத்துள்ளார்.

எனவே கோபமடைந்த அந்த சாமியார் சிவகாமியின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என சாபம் கொடுத்துள்ளார். இதனால் சந்தியாவை சிவகாமி வழக்கை வாபஸ் வாங்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்.  ஆனால் சரவணன் சந்தியாவிற்கு உறுதுணையாக சரவணன் தனது முடிவில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த சாமியார் மீண்டும் ஊருக்கு வருகை தந்துள்ளதால் அனைவரும் ஒன்றாக திரண்டுள்ளனர். இதன் காரணமாக எப்படியாவது சந்தியா செய்த பாவத்தை கழிக்க வேண்டும் என்பதற்காக சிவகாமி பரிகாரம் செய்வதற்காக சாமிக்கு அலங்காரம் செய்து பூஜை ஏற்படும் செய்து வேண்டும் என சந்தியாவிடம் கூறுகிறார்.

சந்தியாவிற்கு கண்ணம்மா உதவி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சாமியின் திறக்கப்படும் பொழுது சாமியின் மேல் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். மேலும் அந்த சாமியார் தீபாராதனை காட்டும் போது யார் இந்த நகையை திருடு என்பதை கடவுளே காட்டிக் கொடுக்கும் என்கிறார்.

இதனால் சந்தியா மற்றும் கண்ணமாய் இருவரும் தீபாராதனை காட்டுகின்றனர்.  இப்படிப்பட்ட நிலையில் அந்த சாமியார் நகையை திருடியவர் சிவகாமி தான் என கூற சிவகாமி அதிர்ச்சியடைகிறார். இவ்வாறு அனைவரும் சிவகாமியை தப்பாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கண்ணமா மற்றும் சந்தியா இருவரும் இணைந்து அவர் போலி சாமியார் என்பதை நிரூபிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.