கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ பாரதியிடம் சத்தியம் கேட்ட சிவகாமி.! அதற்கு பாரதி சொன்ன பதில்..

Bharathi kannama
Bharathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பை வருகிறார்கள்.மேலும் பல வருடங்களாக ஹேமா கண்ணம்மாவின் மகள் தான் என பாரதிக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பிறந்தநாள் விழாவில் அனைத்து உண்மைகளையும் கண்ணம்மா போட்டு உடைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் பாரதி சோகத்தில் இருந்து வரும் நிலையில் சிவகாமி பாரதியை கண்ணமாவை ஏற்றுக்கொண்டு தனது மகள்களுடன் வாழ சத்தியம் கேட்கிறார் ஆனால் பாரதி அப்படியே நிற்க பிறகு கண்ணம்மாவிடம் கேட்க கண்ணம்மா அவருடன் சேர்ந்து வாழ்வது எனக்கு எந்த ஒரு ஆட்சையபயனும் இல்லை ஆனால் அவர் செய்த தப்பு என கூறி என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்.

சிவகாமி ஒரு சின்ன மன்னிப்பு தானே கேட்டுவிடு என பாரதியிடம் கூற பாரதி என்னால் முடியாது என்னை மன்னித்து விடுங்கள் என கூறுகிறார். பிறகு ஹேமாவை கீழே கூப்பிட்டு வெளியே போயிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். ஹேமா பாரதியிடம் எங்கு போக போறோம் என கேட்க கேம் விளையாட போறோம் என கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா என்னுடைய பொண்ணு எனக்கூறி சௌந்தர்யாவிடம் அழுகிறார் பிறகு நான் பங்க்ஷனில் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வரவில்லை என கூறுகிறார் சௌந்தர்யா இல்லை உன்னுடைய நிலைமை எனக்கு புரிகிறது என்ன சொல்கிறார்.

கண்ணம்மா அங்கிருந்து தனது வீட்டிற்கு கிளம்புகிறார் சிவகாமி பாரதியும் கண்ணம்மாவும் கண்டிப்பாக சேர்ந்து வாழ்வார்கள் என நம்பிக்கை கூறுகிறார். சந்தியா ஹேமா என்னுடைய அம்மாவை காட்டுங்கள் என கூறும் பொழுது தான் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என தெரியும் என கூறுகிறார் அதன் பிறகு சௌந்தர்யா சிவகாமியிடம் நீங்களும் சந்தியா போலீஸ் ஆவதை பற்றி யோசிங்கள் என கூறுகிறார்.

உடனே சிவகாமி கண்டிப்பாக சொல்கிறேன் ஊருக்கு போய் யோசித்து பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன் ஆனால் அது நல்ல விஷயமாக இருக்குமா என்று எனக்கு தெரியாது எனக் கூறுகிறார். யோசிக்கிறேன் என கூறியதோடு பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2  சீரியலின் மகா சங்கமம் முடிவடைகிறது.