ஒட்டுமொத்த குடும்பத்தையும் எழிலுக்கு எதிராக திருப்பி கோபி.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.

bhakiya lakshmi 1
bhakiya lakshmi 1

விஜய் டிவியில் பொதுவாக குடும்ப கதைகளை மையமாக வைத்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் கணவர், மாமியார்,மகள், பெரிய மகன் என அனைவரும் குடும்ப தலைவிக்கு எதிராக இருந்த வருகிறார்கள் ஆனால் இளைய மகன் மற்றும் அம்மாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறான்.அதாவது தொடர்ந்து தனது அம்மாவைப் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் எழில் தன்னால் முடிந்தவற்றை செய்து பார்த்துக் கொள்கிறான்.

எனவே எழிலின் கேரக்டரை பார்த்துவிட்டு அனைத்து ரசிகர்களும் எழில் போல் தனது அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தனது அம்மாவை பார்த்து வரும் எழில் தனது அப்பா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்தும் தனது அம்மாவிற்கு தெரியப்படுத்தாமல் தனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக மறைத்து உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருக்கிறான்.

எனவே சமீபத்தில் எழில் தனது முதல் திரைப்படத்தினை அறிமுகப்படுத்த நிலையில் அப்பொழுது கூட தன் வீட்டில் இருப்பவர்களை அழைத்து சென்றான் ஆனால் கோபியிடம் போய் நீங்கள் மட்டும் வராதீங்க என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுதான்.

இவ்வாறு எழிலின் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டினாலும் ஏன் அப்பாவை அழைத்து வரவில்லை என கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கோபியும் அனைவர் முன்பும் எழிலை மாட்டிவிடும் வகையில் மிகவும் கேவலமாக பேசி வருகிறான்.

அதாவது எழில் என்னை வர வேணாம்னு சொன்னதால் தான் நான் வரவில்லை என்று கூறியதை அனைவரும் முன்பும் கூற அனைவரும் எழிலுக்கு எதிராக மாறிவிட்டார்கள். இதற்கு முன்பு எழில் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த பொழுது கோபி ராதிகாவுடன் ஊர் சுற்றுவதை பார்த்து விட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த படத்திற்கு வரவேண்டாம் என்று கூறினால் அதனை தெரிந்து கொள்ளாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் பாக்கிய உட்பட அனைவரும் எழிலை திட்டி வருகிறார்கள்.