திருமணமாகி கிட்டத்தட்ட 25 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த பாக்கியாவை விவாகரத்து செய்து வேண்டும் என்றும் பிறகு கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டு மொத்தமாக தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்காக கோபி பெரிய திட்டம் போட்டுள்ளான்.
தற்பொழுது விவாகரத்தாக உள்ள நிலையில் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் நெருக்கமாக பழகி வருவதால் எப்படியாவது இவர்களுக்கிடையே இருக்கு என்ற நட்பை உடைக்க வேண்டும் என்று கோபி முடிவு செய்துள்ளான். அந்தவகையில் ராதிகாவிடம் இந்த வீட்டை விட்டுவிட்டு நாம் வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு போய்விடலாம் என கோபி கூறினார்.
அதற்கு ராதிகா சொந்த வீட்டை விட்டுவிட்டு எதற்கு வாடகை வீட்டிற்கு போக வேண்டும் என்று கேட்கிறாள் இருந்தாலும் கோபி பல பொய்களைச் சொல்லி சென்டிமென்டாக ராதிகாவை வீடு மாறுவதற்கு ஒப்புக்கொள்ள வைத்து விட்டான்.
இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று ராதிகாவை பார்ப்பதற்காக வந்த பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு முன்பு நின்ற கோபியின் காரை பார்த்துவிட்டு சந்தேகப்படுகிறாள். பிறகு அதனைப் பற்றி நினைத்துக் கொண்டே வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
கோபி வீட்டிற்கு வந்ததும் அவனின் ரூமிற்கு சென்று பாக்கியா உங்கள் கார் ராதிகாவின் வீட்டிற்கு முன்பு நின்றது என்று கேட்பதற்காக சுத்தி வளைத்து கூறிய கொண்டிருக்கிறாள். அதனை புரிந்துகொண்ட கோபி எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறான் பிறகு பாக்கியாவும் கோபிக்கு மாத்திரை தந்து மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறாள்.
இருந்தாலும் பாக்யாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் இருந்து வந்தது பிறகு தனது மகன் எழிலிடம் கூறிவிட்டு வருத்தப்படுகிறாள். எழில் அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என்று கூறிய ஆறுதலை தனது அம்மாவுக்கு கூறுகிறான். இவ்வாறு கோபி பல தடவை பாக்கியாவிடம் மாட்டினாலும் ஏதாவது பொய்களை கூறி தப்பித்து விடுகிறான்.