விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் முழுக்க முழுக்க குடும்ப தலைவியின் நிலைமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி முதல் 5 இடங்களை பிடித்து வருகிறது.
இந்த சீரியலின் சமீப காலங்களாக கோபி தனது மனைவி பாக்கியா விற்கு தெரியாமல் தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறான். இவனுடைய திட்டங்களை அறியாத கூமுட்டை பாக்கியா கோபி எது செய்தாலும் அதற்கு தலையை ஏற்றிக்கொண்டு அவன் சொல்வதையே நம்பி வருகிறான்.
ஏற்கனவே ராதிகா மற்றும் கோபி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ராதிகா எனது நீண்டநாள் நண்பரை பற்றி உங்களுக்கு முன்பு சொல்லி இருந்தேன் அவரை நான் தற்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று பாக்கியாவிடம் கூறினாள்.
ஆனால் பாக்கியவிற்கு தனது கணவன் கோபியை தான் ராதிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாள். என்பது தெரியாமல் அதற்கு ராதிகாவிற்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு ராதிகாவின் வீட்டிலிருந்து வெளியே வருகிறாள். பிறகு கோபியின் கார் ராதிகாவின் வீட்டின் பக்கத்தில் நின்றது அதனை பார்த்த செல்வி ராதிகா சொன்ன ஆல் கோபி சாரா இருப்பாரோ என்று கூறுகிறாள்.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாத கூமுட்டை பாக்கியா அதெல்லாம் இருக்காது என கண்மூடித்தனமாக கோபியை நம்பி வருகிறாள். செல்வியிடம் உனது கணவர் தான் மற்ற பெண்களுடன் பழகுகிறான் என்றால் எனது கணவனும் அப்படி இருப்பாரா என் கணவரின் நடத்தை மீது சந்தேகம் படுற என நடுரோட்டில் வைத்து செல்வியை திட்டுகிறாள்.
பிறகு இனிமேல் எனது வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் என்றும் எனது முகத்தில் முழிக்கக்கூடாது என்றும் திட்டி வீட்டிற்கு அனுப்பி விடுகிறாள். பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் செல்வியை படித்து திட்டி விட்டோமே என்று வருத்தப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் தனது கணவரின் பற்றிய உண்மையான முகத்தை அறிந்து கொண்டு செல்வதற்காக வருத்தப்பட்டு அவர் வீட்டிற்கே சென்று சமாதானப்படுத்துவது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கோபியும் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது வீட்டை விட்டு வெளியேற போகிறான் பிறகு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாக்கியா பார்த்துக் கொள்ளப் போகிறாள்.