விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் குடும்பத்தலைவியாக தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எப்படி கருத்தாக பார்த்துக் கொள்கிறாள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.
பாக்கியாவை எப்படியெல்லாம் கோபி ஏமாற்றுகிறான் என்ற எபிசோடு தான் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.அதாவது கோபி தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் எனவே தனது 25 வருட மனைவியான பாக்கிய அவரை விவாகரத்து செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறான்.
இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவுடன் இருப்பது கோபியின் அப்பா மற்றும் எழில் போன்றோருக்கு தெரியவந்த நிலையில் அதனைப் பற்றி எவ்வளவு கூறினாலும், கோபி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து ராதிகாவை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் பாக்கியா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களும் இணைந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் இந்த மகா சங்கமம் நிறைவடைந்தது. அந்த மகா சங்கமத்தில் கோபி வசமாக சிக்கிய உள்ளான் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் கோபியை மூர்த்தி, தானம், கதிர் மூவரும் கண்காணித்து வந்த நிலையில் கோபியின் அப்பா பிறந்தநாள் விழாவுக்கு வந்த ராதிகாவை பார்த்துவிடக்கூடாது என்று கோபி ரூமுக்குள் போய் விட்டான்.
நடுரோட்டில் ராதிகா மற்றும் கோபி இருவரும் பேசிக்கொண்டு இருப்பதைப் மூர்த்தி பார்த்து சந்தேகத்தை உறுதி செய்தான் இப்படிப்பட்ட நிலையில் மூர்த்தி, தனம் இருவரும் ராதிகாவை நேரில் சந்தித்து பாக்யாவின் குடும்பத்தைப் பற்றியும் கோபி எப்படிப்பட்டவன் என்பதை பற்றியும் சொல்லி விட்டார்கள் எனவே உண்மையை அறிந்து கொண்ட ராதிகா கோபியை இப்பொழுதே உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை பார்க்க வேண்டுமென கூறுகிறாள். கோபி முடியாது என்று கூற அப்போ வீட்டை விட்டு வெளியே போங்க என்று ராதிகா ஒரு விட்டாள். தற்பொழுது கோபி என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகிறான்.