ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியின் நிலைமையை வைத்து ஒளிபரப்பாகிய வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தனது அம்மாவை காப்பாற்ற எழில் படாதபாடு படுகிறார். பிறகு தனது அம்மா குற்றவாளி இல்லை என்பதை அனைவருக்கும் ஆதாரத்துடன் நிரூபித்து அவரை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்.
ஆனால் தனது மனைவி இப்படி ஒரு பிரச்சனையில் இருந்தும் அதனை பற்றி கவலைப்படாத கோபி ராதிகாவுக்கு உதவி செய்கிறான். பிறகு கோபியின் மகள் இனியா கோபிக்கு போன் செய்து நடந்ததை கூறி அழுது கொண்டிருக்கிறாள். பிறகு பயமாயிருக்கிறது வாங்கப்பா என்று கூற கோபி தயங்குகிறான்.
பிறகு பாக்கியாவை நினைத்து வருத்தத்தில் இருக்கிறான் கோபி இருந்தாலும் ராதிகா கோபியின் மீது தனது பாச மழையைப் பொழிந்து கொண்டிருப்பதால் அவனால் போக முடியவில்லை. பிறகு ஒரு நாள் இரவு முழுவதும் ராதிகாவுடன் இருந்த விட்டு மறுநாள் காலையில் தனது வீட்டிற்கு செல்கிறான்.
கோபியின் அம்மா அனைவர் முன்பும் எங்க போன கோபி என்று கேட்கிறார். பிறகு நைட்டு ஃபுல்லா எங்கேயோ தங்கிட்டு காலைல வந்து பாக்கியா எங்கனு கேட்கிற இது ரொம்ப நல்லா இருக்கு கோபி என திட்ட ஆரம்பிக்கிறார். இதனை பயன்படுத்திக் கொண்ட கோபியின் தந்தை ஆத்திரத்தில் கோபியை செவ்வியிலேயே அழைக்கிறார்.
அதுவும் தொடர்ந்து படார் படார் என்று நான் கரைகளை விடுகிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தடுக்க முயன்றும் கோபியின் அப்பா மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார் எனவே கோபி மிரண்டு போய் நிற்கிறான். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் எங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்கள்.
பிறகு எழிலும் தனது அம்மா சமைத்த உணவில் இந்த பிரச்சனை இல்லை என்றும் லட்டில் தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது என கண்டுபிடித்து தனது அம்மாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடுகிறது.