விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி நாடகத் தொடரில் ரசிகர்களுக்கு இந்த நாடகம் மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றைத் தந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களுள் பாக்கியலட்சுமி நாடகம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று.
இதில் உள்ள கதாபாத்திரங்களான பாக்கியா மற்றும் ராதிகா இவர்கள் இருவரும் தற்போது ஜெயிலில் உள்ளனர் இவர்களுள் எவரை கோபி முதலில் காப்பாற்றுவார் என்று மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்தது இந்த வார நாடக தொடர்.
பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மயங்கி விழுந்தனர் அதனால் பாக்கியாவை போலீசில் காட்டிக் கொடுத்தார் கோபி, இதைத்தொடர்ந்து பாக்கியாவை அவரது வீட்டிற்கே சென்று கைது செய்தது காவல்துறை அந்த தருணத்தில் எழில் வீட்டில் இல்லை என்பதால் அவருக்கு செய்தி தெரியாது.
பாக்கியாவின் மகள் அழுது கொண்டிருக்க எழில் செய்தி தெரிந்தவுடன் பதறியடித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்து செல்கிறார். காவல் நிலையத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியதும் பாக்கியா கதறி அழுகிறார், ஆறுதலாக இருக்கும் என்று ராதிகாவிடம் பேச முயற்சிக்கும் பொழுது ராதிகா பாக்கியாவை வெறுப்பாக பார்க்கிறார்.
மேலும் நம்முடைய நட்பு இதோட முடிந்துவிட்டது என்று கூறுகிறார் ராதிகா.காவல் நிலையம் வந்த எழில் போலீஸிடம் பேசி பார்க்கிறார்.ஆனால் போலீஸ்,மெடிக்கல் ரிப்போர்ட் வரும் முறை எங்களால் எதுவும் சொல்ல இயலாது என்று கூறி விட்டனர். ஒரு பக்கம் ராதிகாவை ஜாமீனில் எடுக்க கோபி வக்கீலை அணுகினாலும், மற்றொரு பக்கம் செழியன் பாக்கியாவிற்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிற்கிறார், மொத்த குடும்பமும் பாக்கியாவின் நிலைமையை நினைத்து வருத்தம் அடைய இந்த வார எபிசோட் முடிவடைந்தது.