பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து புதிய சீரியல்களை ஒளிபரப்பாக்கி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி விஜய் டிவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் குடும்ப இளவரசியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியவை விவாகரத்து செய்துவிட்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளான் கோபி. ஏற்கனவே கோபி ஒரு பெண்னுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த கோபியின் அப்பா மற்றும் மகன் எழில் இருவரும் கோபியை மிரட்டி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறான் எழில். ஆனால் அமிர்தா எழிலை வெறும் நண்பனாக நினைத்து வந்த இவர் தற்போது கொஞ்சம் அதிக பாசத்துடன் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் ரௌடி ஒருவன் அமிர்தாவிடம் வம்பு செய்து கிண்டல் அடித்ததால் அவனை அடித்து விட்டு அமிர்தா என்னோட பொண்டாட்டி டா என்ன கூறுகிறான்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது எழில் அமிர்தாவை வைத்து கெட்ட கனவு ஒன்றை காண்கிறான். எனவே அமிர்தாவை இதற்க்கு மேல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனமுடிவெடுத்த எழில் தனது அம்மாவிடம் அமிர்த்தாவை பற்றி கூற இருக்கிறான் எனவே அனைவர் சம்மதத்துடனும் அமீர்தா மற்றும் எழில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.