விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தனது 25 வருட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலி ராதிகாவை எப்படி கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என்பதை மையமாக வைத்து எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்பொழுது எல்லாம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை ஒளிபரப்புவதோடு மட்டுமல்லாமல் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களிலும் பல டுவிஸ்களை வைத்து வருகிறார்கள்.
அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலிலும் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த சீரியலில் ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நான் குற்றவாளி இல்லை என்று வெளி வந்த பாக்கியா தனது பிஸ்னசை தொடங்க ஆரம்பித்துள்ளார்.
ராதிகா கோபியிடம் ராதிகாவின் கணவரை நேரில் சந்தித்து அவரிடம் பாக்கியாவை பற்றி நல்லவிதமாக கூறி மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதை பற்றி பேசவேண்டும் என்று கூப்பிட்டால் கோபி நல்லவன் போல் வீட்டிற்கு சென்று பாக்கியாவை இதற்கு மேல் பிசினஸ்சை தொடங்கு என்று கூறினான்.
இன்னொரு புறம் எழில் தனது அம்மாவிற்காக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளான்.பிறகு எழிலின் தோழியாக நடித்த வரும் ஜானு முடியலடா மிகவும் நெருக்கமாக பழகி வருவதால் அமிர்தா கோவமாக இருந்து வருகிறார். பிறகு அமிர்த்தாவை நேரில் சந்தித்து எழில் நான் கண்ணை மூடினாலே உங்களையும் உங்கள் மகளையும் பார்த்துக் கொள்வது தான் ஞாபகம் வரும் தற்பொழுது வரையிலும் உங்களை மட்டும்தான் காதலிக்கிறேன் என்றும் ஜானு தோழி மட்டும்தான் என்று கூறியிருந்தான்.
இதனைத் தொடர்ந்து தற்போது வந்த ப்ரோமோவில் எழில் ஆரம்பித்த யூடியூப் சேனலில் ஒரு மணி நேரத்தில் 1000 வகையான சமையல் அறை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ராதிகா இதனை பற்றி கூற கோபி மனதிற்குள் ஒரு வார்த்தை கூட அவளிடம் இதனைப் பற்றி சொல்லவில்லை என்று கோபப்படுகிறான் மேலும் ராதிகா பாக்கியாவை பற்றி மிகவும் பெருமையாக பேசிவருகிறார்.
நீங்க புலம்பும் போது எங்களுக்கு அப்படியே சந்தோசமா இருக்கு கோபி.. 😀
பாக்கியலட்சுமி – இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #WeStandWithBaakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/fHCB200hWF
— Vijay Television (@vijaytelevision) April 29, 2022